Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th June 2018 16:08:50 Hours

குளியாப்பிட்டியில் சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இராணுவத்தினரின் உதவிகள்

குளியாப்பிடிய பிரதேச செயலகத்திற்குரிய மீஹாகாகொடுவ, பாகல பிதும மற்றும் பஹத எம்பாவ பிரதேசத்தில் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 14, 143 ஆவது படைத் தலைமையகம், 53, 532 ஆவது படைத் தலைமையகத்தின் பங்களிப்புடன் இப்பிரதேசத்தில் சூறாவளியின் சேதத்துக்கு உள்ளாகி வீதிகளின் முறிந்து விழுந்த பாரிய மரங்களை அகற்றும் பணிகளில் படையினர் (19) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை ஈடுபட்டனர்.

குளியாப்பிட்டி மற்றும் குருநாகல் ஆகிய இடங்களுக்கு இடையிலான போக்குவரத்தை தடுக்கும் வகையில் வீதிகளில் இருந்த குப்பைகள், விழுந்த மரங்கள், விளக்குகள் மற்றும் ஏனைய பொருட்களின் துண்டிப்புக்கள் இராணுவத்தினரது ஒத்துழைப்புடன் நிவர்த்தி செய்யப்பட்டன.

இப்பகுதியில் 21 வீடுகள் மற்றும் 12 வியாபார நிறுவனங்கள் மோசமான முறையில் பாதிக்கப்பட்டிருந்தன, சில குடிமக்கள் தங்களுடைய வீடுகளை விட்டு வெளியேற வேண்டும் என்று ஆரம்ப அறிக்கைகளின் மூலம் வெளியிடப்பட்டன. அத்துடன் குளியாப்பிட்டி நகரத்திற்கு வரும் நுழைவுக் குறிப்புகள் சிலவும் தடுக்கப்பட்டிருந்தன.

மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனகே மற்றும் 14 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரல்ப் நுகேரா அவர்களது அறிவுறுத்தலின் படி 532, 143 ஆவது படைத் தலைமையகங்களுக்கு உரிய 16 ஆவது கஜபா படையணி மற்றும் 1 இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி இணைந்து இந்த பிரதேசங்களில் அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர்.

மேலும் 143 ஆவது படைத் தலைமையகத்தின் படைத் தளபதி பிரிகேடியர் பாலித பெரேரா அவர்களது தலைமையில் இப்பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டன.

Nike Sneakers Store | Klær Nike