Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் எல்லே மற்றும் கூடைப் பந்தாட்டப் போட்டிகள்

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் எல்லே மற்றும் கூடைப் பந்தாட்டப் போட்டிகள் வெலிகந்தையில் உள்ள இப் படைத் தலைமையக மைதானத்தில் கடந்த வெள்ளிக் கிழமை(16) இடம் பெற்றதுடன் 22ஆவது படைத் தலைமையகத்தின் எல்லே விளையாட்டு வீரர்கள் மற்றும் 3(தொண்டர்) படையிருக்கிடையிலான போட்டியில் மகளிர் படையினர் வெற்றியீட்டினர்.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் சந்துசித்த பனன்வெல அவர்கள் கலந்து கொண்டதுடன் இப் போட்டியாளர்களுடனான கலந்துரையாடலையும் மேற்கொண்டார்.

அந்த வகையில் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் முன்அரங்கு பாதுகாப்பு பிரதேச படையினர் போன்றௌரிற்கிடையிலான போட்டிகளும் இடம் பெற்றது.

மேலும் 22ஆவது படைத் தலைமையகம் மற்றும் 23ஆவது படைத் தலைமையகங்கள் போன்றவற்றிற்கு இடையில் இடம் பெற்ற எல்லே போட்டிகளின் போது இப் படைத் தலைமையகம் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டதுடன் கூடைப் பந்தாட்டப் போட்டிகளின் போது 3 (தொண்டர்) மகளிர்ப் படை மற்றும் 5(தொண்டர்) மகளிர்ப படையிருக்கிடையிலான போட்டிகளில் 3(தொண்டர்) மகளிர் படையினர் வெற்றியீட்டியதுடன் வெற்றிக் கிண்ணத்தை கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதியவர்கள் வழங்கி வைத்தார்.

அந்த வகையில் எல்லே போட்டிகளின் போது 23ஆவது படைத் தலைமையகத்தின் லான்ஸ் பொம்பொடியர் டபிள்யூ எம் ஏ சமன் குமார சிறந்த பந்து வீச்சாளராககும் 22ஆவது படைத் தலைமையகத்தின் படை வீரர் ஏ டபிள்யூ தனன்ஜித் சிறந்த பந்து காப்பாளராகவூம் விளங்கினார்.

மேலும் 3(தொண்டர்) மகளிர்ப் படையின் கூடைப் பந்தாட்டப் போட்டியின் தலைவியாக ஸ்டாப் சார்ஜன்ட் டபிள்யூ எரந்தி காணப்பட்டதுட்ன சிறந்த பந்து விளையாட்டாளராக கோப்ரல் ஆர் பிரியானி 3(தொண்டர்) மகளிர்ப் படை மற்றும் சிறந்த விளையாட்டாளராக கோப்ரல் டி ஏ நெலும் தேவி 3(தொண்டர்) மகளிர்ப் படை போன்றௌர் காணப்பட்டனர்.

இந் நிகழ்வில் 22ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர முன்அரங்க பாதுகாப்பு அதிகாரியான மேஜர் ஜெனரல் மனோஜ் முத்தநாயக்க மற்றும் பல உயர் அதிகாரிகள் போன்றௌர் கலந்து கொண்டனர்.

Sportswear Design | Air Jordan Release Dates 2020