Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th January 2020 16:51:42 Hours

கிளிநொச்சி படையினரால் நன்கொடை வழங்கும் நிகழ்வு

கிளநொச்சி பிரதேசத்தில் உள்ள பின் தங்கிய கிராமப்புறத்தில் வாழும் மாணவர்களின் கல்வித் தரங்களை மேம்படுத்துவதற்காக கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரின் ஒழுங்கமைப்பில் 573 ஆவது படைப் பிரிவு படையினரின் ஏற்பாட்டில் வருமை கோட்டின் கீழ் வாழும் 275 மாணவர்களுக்கு அத்தியாவசிய பாடசாலை உபகரணங்கள் இம் மாதம் (6) ஆம் திகதி திங்கட்கிழமை கொரக்கன்காடு புனித அந்தோணி ரோமன் கத்தோலிக்க பாடசாலை மற்றும் வட்டகச்சி தெற்கு உள்ள தமிழ் கலவன் பாடசாலைகளில் தனி தனியாக இடம் பெற்ற நிகழ்வில் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்விற்கு கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த குணரத்ன அவர்கள் பிரதான அதிதியாக கலந்துகொண்டார். அதேபோல் திரு சுரேன் மெல்கொம் டி சில்வா அவர்களின் உதவியுடன் இந்த நன்கொடைகள் வழங்கப்பட்டன.

இந்த நன்கொடைகளில் ஒவ்வொரு பொதியிலும் பயிற்சி புத்தகங்கள், பேனாக்கள், பென்சில்கள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் உள்ளடக்கப்பட்டிருந்த்துடன்,, இரு பாடசாலைகளிளும் தரம் 1 - 11 இல் கல்வி கற்கும் மாணவர்களுக்கு நன்கொடைகள் வழங்க தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடதக்க விடயமாகும்.

இந்த நிகழ்வுகள் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி அவர்களின் மேற் பார்வையின் கீழ் ஏற்பாடுசெய்யப்பட்டதுடன், 573 ஆவது படைப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள், நன்கொடையாளர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோர்கள் கலந்துகொண்டனர். latest Running | Cactus Plant Flea Market x Nike Go Flea Collection Unveils "Japan Made" Season 4