Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th September 2019 16:44:14 Hours

கிளிநொச்சி படையினரது ஏற்பாட்டில் கண் சிகிச்சை மற்றும் மூக்கு கண்ணாடிகள் வழங்கி வைப்பு

பத்தரமுல்லை சுபாதிபுர கண் பார்வை மருத்துவர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்களது பூரண கண்காணிப்பின் கீழ் கிளிநொச்சி செலும்பியச கேட்போர் கூடத்தில் இம் மாதம் (14) ஆம் திகதி கிளிநொச்சி பிரதேசத்தைச்சேர்ந்த பொது மக்களுக்கு கண் சிகிச்சை முகாம் மற்றும் மூக்கு கண்ணாடிகள் வழங்கி வைக்கப்பட்டன.

கண் பார்வை மருத்துவர்கள் சங்கத்தின் தலைவி டொக்டர் ரமனி கெப்ரால் அவர்களது தலைமையில் கிளிநொச்சியிலுள்ள 88 நோயாளர்களது கண்கள் பரிசோதனை செய்து மூக்குகண்ணாடிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

மேலும் இந்த கண் சிகிச்சை முகாமிற்கு 372 நோயாளர்கள் சிகிச்சை பெறுவதற்காக சமூகமளித்திருந்தனர். இந்த சமூக நலன்புரித் திட்டங்கள் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பொது நிர்வாக அதிகாரி பிரிகேடியர் பி எம் எல் சந்திரசிறி மற்றும் நிர்வாக விநியோக அதிகாரி பிரிகேடியர் எச் எம் எச் என் ஹேரத் அவர்களது வழிக்காட்டலின் கீழ் இடம்பெற்றது.

இந்த கண் சிகிச்சை முகாமில் 11 பணிப்பாளர்கள், 15 ஒளியியல் வல்லுநர்கள், 15 தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் கண் பார்வை மருத்துவர்கள் சங்கத்தின் 47 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Sportswear free shipping | Hats to Match Jordans Hyper Royal Bulls Hat