Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th November 2018 11:48:02 Hours

கிளிநொச்சியில் 65மற்றும் 57ஆவது படையினரால் வெள்ள அனர்த்தப்பணிகள் முன்னெடுப்பு

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 57ற்கு மேற்பட்ட படையினர் வியாழக்கிழமை(08) வன்னிவிளன்குளக்கட்டினைச் சுற்றி மணல் மூட்டைகளை இடும் பணிகளை மேற்கொண்டனர்.

அந்த வகையில் மாந்தை கிழக்கின் மற்றும் விவசாயயத்திணைக்களத்தின் அதிகாரிகள் மழைநீர் காரணமாக குளக்கட்டு வெடிப்பு அபாயம் காணப்படுவதால் இவற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் 65ஆவது படையினருக்கு தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் 65ஆவது படைத் தலைமையக தளபதியான பிரிகேடியர் வசந்த குமாரப்பெரும அவர்களின் வழிகாட்டலின் கீழ் 10ஆவது இலங்கை இலேசாயூத காலாட் படையின் மற்றும் 21ஆவது (தொண்டர்) இலங்கை இலேசாயூத காலாட் படையின் 57படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து குளக்கட்டைச் சுற்றி மணல் மூட்டைகளை இட்டு நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

எவ்வாறாயினும் படையினர் இந் நிலமையை வியாழக் கிழமை(08) கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர். அதேவேளை கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக 57ஆவது படைப் பிரிவினர் வியாழக் கிழமை (08) மதியம் 300 சமைத்த உணவூப் பொதிகளை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 75குடும்பங்களிற்கு மேற்பட்ட நபர்களுக்கு வழங்கியூள்ளனர். மேலும் கிளிநொச்சி -22 ரத்தினபுர (தெற்கு) கராச்சி பிரதேச செயலகப் பிரிவூ மற்றும் அனுராதபுரத்தின் திரிஅருகுளம் போன்ற பிரதேசங்களின் குளக்கட்டுகளும் மழைநீர் காரணமாக நிரைந்துள்ளது.

57ஆவது படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்களின் வழிகாட்டலின் கீழ் 07ஆவது இலங்கை இலேசாயூத காலாட் படையினரால் வெள்ளத்தின் காராணமாக இடம் பெயர்துள்ள 300பேரிற்கு உணவூப் பொதிகளை வழங்கி வைத்துள்ளனர்.

அதே வேளை இராணுவத்தின் மருத்துவப் பிரிவினர் இடம் பெயர்ந்துள்ள குடும்பங்களின் சுகாதார நடவடிக்கைகளுக்காக சென்று அவர்களுக்கு மருந்துகளை வழங்கி வைத்துள்ளனர். Sports Shoes | Shop: Nike