Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

கரப்பந்தாட்டம் சம்பியன்ஷிப் போட்டி யில் 6ஆவது (தொண்டர்) இராணுவ புலனாய்வு படையணி வெற்றி

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் அனைத்து படைப் பிரிவுகளில் பணிப்புரியும் படையினர்களின் நல்லெண்ணம், புரிதல் மற்றும் விளையாட்டுத் திறன்களை ஊக்குவிக்கும் நோக்கில், முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த செனவிரத்ன அவர்களின் முன்முயற்சியால் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரால் கரப்பந்து போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த போட்டியில் சிறந்த அணிகளாக தெரிவுசெய்யப்பட்ட முல்லைத்தீவு பாதுகாப்பு படை அணியும் 6 ஆவது (தொ) இராணுவ புலனாய்வுப் படையணியும் 7 ஆவது இலங்கை இராணுவ போர்கருவி படையணியும் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (26) ஆம் திகதி போட்டியிட்டன. இந்த நிகழ்வில் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டு இப்போட்டியை பார்வையிட்டனர்.

இப்போட்டியில், 6 (தொ) இராணுவ புலனாய்வுப் படையணி வெற்றியை தனதாக்கிகொண்டன.

முல்லைத்தீவு பாதுகாப்பு படை தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த செனவிரத்ன அவர்களால் வெற்றிபெற்ற வெற்றியாளர்களுக்கு வெற்றி கிண்ணம் வழங்கிவைத்தார். இந்த நிகழ்வில் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். url clone | Nike Releases, Launch Links & Raffles