Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st April 2019 10:19:20 Hours

கத்தோலிக யாத்திரீகர்களுக்கான இராணுவ விருந்தோம்பல்

ஈஸ்ட்டர் தினப் பண்டிகையினை முன்னிட்டு மன்னார் தேவாலயத்தில் இருந்து வவுனியா கோமரேசன்குளம் வரை சென்ற பாத யாத்திரீகர்களுக்கான உணவு மற்றும் மருத்துவ வசதிகளானது 61 ஆவது படைப்பிரிவினரால் கடந்த வியாழக்கிழமை (28) ஆம் திகதி பூவரசங்குள சந்தியில் வைத்து ஏற்பாடுசெய்யப்பட்டன.

மேலும், ஏதிர் வரும் 29 ஆம் திகதி மன்னார் ஆயரினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு நிகழ்ச்சியில் குறித்த பாதயாத்திரீகர்கள் கோமரேசன்குளம் ஆலயத்தை சென்றடைந்ததன் பின்னர் கலந்துகொள்வார்கள். வீதியோரங்களிலுள்ள தேவாலயங்களினால் மூன்று நாற்களாக ஏற்பாடு செய்யப்பட்ட விஷேட இரவு வழிபாட்டு நிக்ச்சிகளில் பக்தர்கள் மடு மாதா ஆலய வழிபாடுகள் உட்பட கலந்து கொண்டனர்.

61 ஆவது படைப்பிரிவின் படைத்தளபதி பிரிகேடியர்; கே.டி.சி.ஜி.ஜே. திலகரத்ண அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய அப்படையினரால் விஷேட கூடாரங்கள் அமைத்து யாத்திரீகர்களை வரவேற்றதுடன் அவர்களுக்கான இனிப்பு பண்டங்கள் குளிர்பானங்கள் மற்றும் மருத்துவ சிகிச்சை போன்ற வசதிகளையும் ஏற்பாடு செய்துகொடுத்தனர். மேலும் உஷ்ண காலநிலையை கருத்திற்கொள்ளாது பல இராணுவ அதிகாரிகள் மற்றும் ஏனைய படைவீரர்கள் இவ் விருந்தோம்பல் நிகழ்வில் இணைந்துகொண்டனர்.

அதிகமான யாத்திரீகர்கள் அதிக வெப்பநிலைகாரணமாக தங்களது ஓய்வுகளை இராணுவதிதினரால் அமைக்கப்பட்ட கூடாரங்களில் எடுத்ததுடன் இராணுவத்தினரின் விருந்தோம்பல் செயற்பாடுகளுக்கான நன்றிகளையும் தெரிவித்தனர். Sports Shoes | Air Jordan