Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

கணர் சுப்பர் குரொஸில் தமது திறமையை வெளிக்காட்டிய இராணுவ வீரர்கள்

இலங்கை பீரங்கிப் படையணியின் தலைமையில் இலங்கை ஒட்டொமொபைல் விளையாட்டு கழகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட 2017ஆம் ஆண்டிற்கான கணர் சுப்பர் குரொஸ் (‘Supper Cross) போட்டி நிகழ்வானது தொடர்ச்சியாக 12வது தடவையாக கடந்த செவ்வாய்க் கிழமை (8) மின்னேரிய, இலங்கை பீரங்கிப் படையணியின் ஓடுபாதையில் இடம் பெற்றது.

அந்த வகையில் இப் போட்டி நிகழ்வில் 12 மோட்டார் கார்கள் , 12 மோட்டார் சைக்கிள்கள் (250 CC,105 CC) மற்றும் 2 ஜீப் வண்டிகள் போன்றவற்றின் போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

இப் போட்டி நிகழ்வின் மூலம் பெறப்படும் முதலீட்டை இப் படைத் தலைமையகம் தமது நலன்புரி தேவைகளுக்காக பயன்படுத்துவர்.

அந்த வகையில் இலங்கையின் பிரசித்திபெற்ற ஓடுனராக அஷான் சில்வா அவர்கள் கயன் சந்தருவன் அவர்களைத் தோற்கடித்து வெற்றிக் கிண்ணத்தைப் பெற்றுக் கொண்டார்.

அந்த வகையில் இப் போட்டி நிகழ்வில் கலந்து கொண்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் இராணுவ படை வீரர்கள் தமது திறமையை வெளிக்காட்டியுள்ளனர்.

இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக இராணுவ பதவி நிலைப் பிரதானியவர்கள் கலந்து கொண்டதுடன் இப் போட்டியின் வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்களையும் வெற்றிக் கிண்ணத்தையும் வழங்கினார்.

இப் போட்டியில் வெற்றியீட்டிய வெற்றியாளர்களின் பெயர் பட்டியல் பின்வருமாறு

ஜீப் வாகனங்களுக்கான குழுப்போட்டியில் வெற்றியீட்டியவர்கள்

லெப்டினன்ட் கேர்ணல் ஜெ கே டீ ஜி ஜயசிங்க - இலங்கை இராணுவ இயந்திரவியல் மற்றும் பொறியியலாளர் படையணி (2ஆம் இடம்)

லெப்டினன்ட் கேர்ணல் டபிள்யூ ஆர் டபிள்யூ எம் எஸ் ஆர் எம் பி வீரகோண் - இலங்கை இராணுவ கஜபா படையணி (2ஆம் இடம்)

மோட்டார் சைக்கிள் (250CC) – தேசிய போட்டி

படைவீரர் குமாரசிங்க - இலங்கை இராணுவ சேவைப் படையணி (3ஆம் இடம்)

மோட்டார் சைக்கிள் (125CC) – பாதுகாப்பு படைகளின் போட்டி

கோப்பிரல் பி ஆர் விஜேரத்தின – விஜயபாகு காலாட் படையணி (2ஆம் இடம்)

MX மோட்டார் சைக்கிள் (250CC) – தேசிய போட்டி – 2ஆம் போட்டி

படைவீரர் டீ பீ கே சிவா - இலங்கை இராணுவ சமிக்ஞைப் படையணி (5ஆம் இடம்)

latest Nike Sneakers | Nike Air Force 1 , Sneakers , Ietp STORE