Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th February 2018 13:00:00 Hours

எவரஸ்ட் மலை அனுபவத்தையுடைய நபர்களினால் இராணுவத்தினருக்கு தெளிவூட்டும் நிகழ்வு

பிரசித்தி பெற்ற எவரஸ்ட் மலையில் ஏறி புகழைப் பெற்றிருந்த பெண்ணான ஜயந்தி குருஉதும்பல மற்றும் ஜொஹான் பிரிஸ் அவர்களினால் எவரஸ்ட் மலையின் போது தாங்கள் பெற்ற அனுபவங்கள் தொடர்பாக (23) ஆம் திகதி வெள்ளிக் கிழமை தெளிவூட்டும் செயலமர்வு இடம்பெற்றன.

எவரஸ்ட் மலை உச்சிக்கு சென்ற ஆசியாவைச் சேர்ந்த இலங்கை பெண்மணி ஜயந்தி குருஉதுப்பல ஆவர்.

இந்த தெளிவூட்டும் செயலமர்வில் இராணுவ அதிகாரிகள் 150 பேரும்670படையினரும் கலந்து கொண்டனர்.

இந்த செயலமர்வு கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்களதுஎண்ணக்கருவிற்கமைய இடம்பெற்றன.

இந்த செயலமர்வின் இறுதியில் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரதான பதவி நிலை அதிகாரி பிரிகேடியர் ஜகத் ரத்னாயக்கவினால் ஜயந்தி குருஉதும்பல மற்றும் ஜொஹான் பீரிஸ் அவர்களுக்கு நினைவு சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

Sports Shoes | 【海外近日発売予定】 サウスパーク × アディダス オリジナルス キャンパス 80S "タオリー" (GZ9177) - スニーカーウォーズ