Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்கள்

05th September 2018 02:34:43 Hours

இலங்கை வங்கி ஊழியர்களுக்கு ‘ இராணுவ தலைமைத்துவ’ பயிற்சிகள்

இலங்கை இராணுவத்தினால் இலங்கை வங்கி ஊழியர்கள் 1500 பேருக்கு 6 இராணுவ பயிற்சி நிலையங்களில் ‘ இராணுவ தலைமைத்துவம் தொடர்பான பயிற்சிகள் (3) ஆம் திகதி திங்கட் கிழமை ஆரம்பமானது.

இலங்கை வங்கியினால் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களுக்கு விடுத்த வேண்டுகோளுக்கமைய இந்த பயிற்சிகள் இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்டன.

இந்த பயிற்சிகள் மின்னேரிய காலாட்படை பயிற்சி நிலையம், தியதலாவை இராணுவ பயிற்சி முகாம், அம்பேபுஸ்ஸ இராணுவ முகாம், அநுராதபுரம் படைக் கலச் சிறப்பணி பயிற்சி நிலையம், விடுதல்தீவு கொமாண்டோ பயிற்சி நிலையம், பான்கொல்ல இராணுவ பயிற்சி முகாமில் இடம்பெற்றன.

இந்த பயிற்சியின் ஊடாக , சமூக ஒழுக்க முன்னேற்றம், தொழிற்துறை பயிற்சி திறன்களை மேம்படுத்துதல், சவால்களுக்கு முகமளித்தல், நல்ல சமுதாய முன்னோடிகளின் முன்னேற்றம், மன சமநிலையை பராமரித்தல் போன்ற விடயங்கள் உள்ளடக்கி ஒரு வார காலம் இந்த பயிற்சிகள் இடம்பெறும்.