Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th November 2018 06:32:15 Hours

இலங்கை பொறியியலாளர்ப் படையினரின் உயிர் நீத்த படையினருக்கான 67ஆவது ஆண்டு விழா

இலங்கை பொறியியலாளர்ப் படையணியானது நாட்டின் பலவேறு தேவைகளின் போதும் அபிவிருத்தி நடவடிக்கைகளின் போதும் தமது பொறியியலாளர் மற்றும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பல்வேறு கட்டிட அமைப்புகளை மேற்கொண்டுள்ளது. மேலும் இப் படையினரின் 67ஆவது ஆண்டு நிறைவுப் பூர்தியை முன்னிட்டு இரு நாள் விழபாட்டு நிகழ்வுகள் பானாகொடையில் உள்ள இலங்கை பொறியியலாளர்ப் படைத் தலைமையகத்தில் சனிக் கிழமை (10) இடம் பெற்றது.

மேலும் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் இலங்கை பொறியியலாளர்ப் படையணியின் தளபதியும் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியுமான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியவர்களின் அழைப்பை ஏற்று கலந்து கொண்டதுடன் பிரதம அதிதியவர்கள் இலங்கை பொறியியலாளர்ப் படையணியின் மத்திய தளபதியான பிரிகேடியர் எஸ் டி பி திஸாநாயக்க அவர்கள் வரவேற்றார்.

இந் நிகழ்வில் கலந்து கொண்ட பெற்றார் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு தமது அன்புக்குறியவர்களை நினைத்து கண்ணீர் மல்க தமது அஞ்சலியை மலர்கள் இட்டு செலுத்தினர். மேலும் பல உயர் அதிகாரிகளால் மலர்கள் போன்றன இவ்விடத்திற்கு வைக்கப்பட்டது.

இதன் போது தேசிய கீதம் மற்றும் இராணுவ கீதம் போன்றன இசைக்கப்பட்டு மரணித்த போர் வீரர்களுக்கான இருநிமிட மௌன அஞ்சலியூம் செலுத்தப்பட்டது மேலும் இதன் போது ரணபெர நிகழ்வுகளும் இடம் பெற்றது.

மேலும் பௌத்த மத கிறிஸ்தவ இந்து மற்றும் இஸ்லாமிய வழிபாட்டு நிகழ்வுகள் போன்றனவூம் இதன் போது இப் படைத் தலைமையக தளபதியின் பங்கேற்போடு இடம் பெற்றது மேலும் இந் நிகழ்வின் போது இலங்கை பொறியியலாளர்ப் படையணியைச் சேர்ந்த போரின் போது மரணித்த மற்றும் ஓய்வூ பெற்ற படையினரை நினைவூ கூறும் பொருட்டு இடம் பெற்றது.

இந் நிகழ்வில் மேஜர் ஜெனரல் சந்துசித்த பனன்வெல மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன மேஜர் ஜெனரல் எச் ஆர் கே பி பீரிஸ் மேஜர் ஜெனரல் டி ஜெ நாணயக்கார மேஜர் ஜெனரல் எஸ் கே திருநாவுக்கரசு மேஜர் ஜெனரல் டபிள்யூ+ ஏ என் எம் வீரசிங்க மற்றும் பல உயர் அதிகாரிகள் இப் படைத் தலைமையக சார்ஜன்ட் மேஜர் மற்றும் உயிர்நீத்த படைவீரர்களின் உற்றார் உறவினர்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.

மேலும் இதன் போது முழு இரவு நேர பிரித் வழிபாட்டு நிகழ்வூகள் இலங்கை பொறியியலாளர்ப் படையணியின் தளபதிகள் இராணுவத் தளபதி மற்றம் இப் படைத் தலைமையக படையினர் போன்றோரின் பங்களிப்புடன் பழமைவாய்ந்த பௌத்த மத தேரர்களின் பங்களிப்புடன் அலரி மலர்கள் போன்றவற்றைக் கொண்டு மிகவும் அலங்கரிக்கப்பட்ட நிலையில் இடம் பெற்றது. jordan release date | New Releases Nike