Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

இலங்கை இராணுவ மகளிர் படையணியினர் 34 வது தேசிய படகோட்ட சாம்பியன்ஷிப் போட்டியில்; வெற்றி

தியவன்ன படகோட்ட நிலையத்தில்; கடந்த சனிக் கிழமை (2) ஆம் திகதி இடம்பெற்ற 34 வது தேசிய படகோட்ட திறந்த பெண்கள் சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை இராணுவ மகளிர் படையணியினர் வெற்றி பெற்றுள்ளனர்.

மேலும், ஆண்களுக்காக இடம்பெற்ற திறந்த போட்டியான நான்கு பேர் கொண்ட குழு படகோட்ட மற்றும் 23 கீழ் உள்ள இரட்டையர் படகோட்டப் போட்டியில் இலங்கை இராணுவ வீரர்கள் வெற்றிபெற்றதுடன் இலங்கை கடற் படை மற்றும் ஆகாயப் படையினர் ஆண்களுக்கான திறந்த வகைப் போட்டியில் கூட்டாக வெற்றியீட்டினர். அத்துடன் இரண்டாவது சுற்றுப் போட்டியில் திறந்த ஆண்கள் ஒற்றை, திறந்த ஆண்கள் சோடி, திறந்த ஆண்கள் கொக்ஸ்லெஸ் போர்ஸ், மற்றும் 23 கீழ் உள்ள திறந்த ஆண்கள் சோடி போன்றனவும் இடம்பெற்றன.

அதனைத் தொடர்ந்து மகளிர் ஒற்றை,திறந்த மகளிர் சோடி, திறந்த மகளிர் இரட்டையர் படகோட்ட மற்றும் திறந்த போட்டியான நான்கு பேர் கொண்ட மகளிர் படகோட்ட குழுப் போட்டியிலும் இலங்கை இராணுவ மகளிர் அணியினர் கலந்து கொண்டு வெற்;றிபெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. Nike shoes | Air Jordan