Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st April 2019 16:50:59 Hours

இலங்கை இராணுவ போர்கருவிப் படையணியினரால் மரநடுகைத் திட்டம் முன்னெடுப்பு

தம்பகொடவில் அமைந்துள்ள இலங்கை இராணுவ போர்கருவிப் படையணியின் தளபதியான மேஜர் ஜெனரல் எச் ஜி ஐ வித்தியாநந்த அவர்களின் வழிகாட்டலின் கீழ் சூழலை பாதுகாக்கும் நோக்கில் மரநடுகைத் திட்டமானது கடந்த வெள்ளிக் கிழமை (29) இலங்கை இராணுவ போர்கருவிப் படையணித் தலைமையகத்தில் இடம் பெற்றது.

அந்த வகையில் இப் படைத் தலைமையகத்தில் 550ற்கும் மேற்பட்ட பழ மரங்கள் மற்றும் பெறுமதிமிக்க மரக் கன்றுகள் போன்றன நடப்பட்டன. இதன் போது போர்கருவிப் படையணியின் பயிற்றுவிப்பு கல்லூரி படையினர் மற்றும் இப் படைத் தலைமையகத்தின் தளபதியான பிரிகேடியர் எஸ் எம் டபிள்யூ பீ என் தலகஹவத்த உயர் அதிகாரிகள் மற்றும் இங்கிரிய வன காரியாலய அதிகாரிகள் போன்றோர் கலந்து கொண்டனர்.

மேலும் இச் செயற்திட்டம் தொடர்பான விளக்கங்கள் இங்கிரிய வன காரியாலய அதிகாரிகளால் இயற்கையின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் இவ்வாறான செயற்திட்டங்கள் நாடளாவிய ரீதியில் சூழலை பாதுகாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டது.

இந் நிகழ்வி;ன் இறுதியில் இதன் போது கலந்து கொண்டவர்களுக்கான மூலிகைக் கஞ்சியும் பகிரப்பட்டது. Sneakers Store | Women's Nike Air Jordan 1 trainers - Latest Releases , Ietp