Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th June 2018 09:39:38 Hours

இராணுவ விவசாய சாகுபடியாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு

‘வச விச நெதி ரடக்’ (விசம் இல்லாத நாடு ) எனும் தேசிய உணவு திட்டத்திற்கமைய மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனஹே அவர்களின் ஆலோசனைக்கமைய இப் படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் அனைத்து படைத் பரிவுகள் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட விவசாயம் மற்றும் அதன் உற்பத்தி திறன்கள் தொடர்பான போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்கு சான்றிதல்கள் வழங்கும் நிகழ்வு (08) ஆம் திகதி வெள்ளிக் கிழமை இடடம் பெற்றது.

அதற்கமைய அடுத்த மூன்று ஆண்டுகளில் விஷம் இல்லாமல் உள்ளூர் உணவு உற்பத்தியின் துரித வளர்ச்சியை விரைவுபடுத்த நோக்கத்துடன் மதிப்புக்குறிய ஜனதிபால மைத்திரிபால சிரிசேன அவர்களின் எண்ணக்கருவிற்கமைய ‘வச விச நெதி ரடக் ‘(விசம் இல்லாத நாடு ) தேசிய உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இதன் நிமித்தம் இராணுவத்தில் விவசாயம் பயிர் சாகுபடி கால்நடைகள் மேலாண்மை, விவசாய உபகரணங்களின் மேலாண்மை மற்றும் சம்பந்தப்பட்ட விவசாயிகளின் நீர்ப்பாசன முறை ஆகியவற்றின் போது நீர் மற்றும் நடைமுறை அறிவுறைகளும் வழங்கினர்.

இதன் இறுதி விரிவுரை மற்றும் சான்றிதல் வழங்கும் நிகழ்வானது வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தில் இடம் பெற்றது.

பயிர்ச்செய்கை போட்டியில் மிகச்சிறந்த படையணியாக 12 ஆவது இலங்கை இராணுவ பொறியியலாளர் படையிணி ஆகும் வன்னி பாதுகாப்ப படைத் தலைமையகம் மற்றும் 143 ஆவது படைப் பரிவூ முறையே இரண்டாவது மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றுக் கொண்டது.

இந் நிகழ்விற்கு இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படையினர்களும் விவசாயம் நிபுணத்துவக் குழுவினர்களும் கலந்து கொண்டனர்.

best Running shoes | Air Jordan XXX1 31 Colors, Release Dates, Photos , Gov