Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

இராணுவ ரெஜிமென்ட் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பம்

இலங்கை இராணுவ கிரிக்கெட் சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இராணுவ கிரிக்கெட் ரெஜிமேந்துவின் ( 'B' குழுவினரின்) கிரிக்கெட் போட்டிகள் ஜுன் மாதம் 12ஆம் மற்றும் 13ஆம் திகதிகளில் பனாகொடை இலங்கை இராணுவ பீரங்கிப் படை ரெஜிமேந்து மைதானத்தில் மற்றும் மத்தேகொட இலங்கை இராணுவ பொறியியளாளர் மைதானத்தில் நடைபெற்றது.

இராணுவகிரிக்கெட் 'B' குழுவினரின் கிரிக்கெட் போட்டிகள் இராணுவ கிரிக்கெட் சங்கத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயசுந்தர அவர்களின் தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்டதுடன் இப் போட்டியின் இறுதிச் சுற்றானது ஜீலைமாதம் இடம் பெறவூள்ளது.

கடந்த திங்கட்கிழமை (12) திகதி இடம் பெற்ற போட்டியின் போது இலங்கை இராணுவ பொறியியளாளர் கிரிக்கெட் அணியினர் 7 ஓட்டங்களினால் தோல்வியியை தழுவியதுடன் இலங்கை தரைப்படை போர் கருவிப் படையணி இப் போட்டியில் வெற்றியீட்டியது.

அதனைத் தொடர்ந்து(13) திகதி இடம் பெற்றபோட்டியின் போது இலங்கை இராணுவ பொதுசேவை படையணியூடன் போட்டியிட்ட இலங்கை இராணுவ சமிக்சை படையணி 6 ஓட்டங்களினால் தோல்வியினைத் தழுவிக் கொண்டதுடன் இலங்கை இராணுவ பொது சேவை படையணியினர் 159 ஓட்டங்களில் 6 விக்கற்றுகளை வீழ்த்தி வெற்றியீட்டியுள்ளனர்.

எவ்வாறு இருப்பினும் மூன்றாம் சுற்று போட்டியில் இலங்கை இராணுவ பொதுசேவை படையணி 58 ஓட்டங்களில்253 புள்ளிகளைப் பெற்று இலங்கை இராணுவ படைக்கலச் சிறப்பணியினை தோற்கடித்துள்ளது.

மேலும் இராணுவ கிரிக்கெட் சங்கத்தினர் இராணுவ வீரர்களுக்கான பயிற்சிகளையும் முன்னெடுப்பது முக்கிய விடயமாகும்.

buy shoes | Mens Flynit Trainers