12th July 2019 20:24:09 Hours
இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் அணிநடைப் போட்டிகள் கடந்த செவ்வாய்க் கிழமை(09) கிரிதளை இராணுவ பொலிஸ் படையணி கல்லூரி மைதானத்தில் இடம் பெற்றதோடு இதன் போது 1ஆவது இலங்கை இராணுவ பொலிஸ் படையணி முதலாம் இடத்தைப் பெற்றுள்ளது.
இந் நிகழ்வில்; பிரதம அதிதியாக இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் தளபதியான கேர்ணல் ஏ எல் இலங்ககோன் அவர்கள் கலந்து கொண்டதுடன் வெற்றியாளர்கள் மற்றும் வெற்றிபெற்ற குழுவினருக்கான சின்னங்களை வழங்கினார். இதன் போது இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் அனைத்து படைத் தலைமையக மற்றும் பிரிவுகளின் கட்டளை அதிகாரிகள் போன்றோர் தமது படைத் தலைமையகத்தை முன்னிலைப்படுத்தி கலந்து கொண்டனர்.
இப் போட்டிகளில் 2ஆம் இடத்தை அனுராதபுரவில் அமைந்துள்ள இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் பெற்றுக் கொண்டதுடன் 3ஆம் இடத்தை கிரித்தளையில் உள்ள இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் பெற்றுக் கொண்டனர்.