Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th February 2019 22:19:46 Hours

இராணுவ பதவி நிலை பிரதானி கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்

இலங்கை இராணுவத்தின் பதவி நிலை பிரதானியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு நிர்வாக பரிசீலனைகள் நிமித்தம் உத்தியோகபூர்வமான விஜயத்தை இம்மாதம் (11) ஆம் திகதி மேற்கொண்டார்.

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த பதவி நிலை பிரதானியை கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அநுர ஜயசேகர அவர்கள் வரவேற்றார். பின்பு பதவி நிலை பிரதானிக்கு 10 ஆவது கஜபா படையணியினால் இராணுவ கௌரவ அணிவகுப்பு மரியாதைகள் வழங்கப்பட்டன. அதனை தொடர்ந்து இராணுவ பதவி நிலை பிரதானியினால் தலைமையக வளாகத்தினுள் மாமர நடுகை நிகழ்வும் இடம்பெற்றது.

பின்னர் பதவி நிலை பிரதானியின் தலைமையில் இராணுவ அதிகாரிகளின் பங்களிப்புடன் கடமைகளின் செயல்திறன்மிக்க செயல்திறனை இராணுவத்தில் நிர்வாக நடவடிக்கைகளை மீளாய்வு செய்வதன் முக்கியத்துவம் தொடர்பான கலந்துரையாடலும் இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போது இராணுவ பொது நிர்வாக பிரதானி, படைத் தளபதிகள், பதவி நிலை உத்தியோகத்தர்கள் இணைந்திருந்தனர்.Sports brands | Sneakers