Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th September 2018 14:41:52 Hours

இராணுவ படை வீரர்களுக்கு ஆங்கில பயிற்சி நெறிகள்

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 58 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் ஆங்கில பயிற்சி நெறிகள் மாத்தறையில் உள்ள 3 ஆவது கெமுனு காலாட்படைத் தலைமையகத்தில் ஜூன் மாதம் 04 ஆம் திகதி ஆரம்பமானது.

இந்த பயிற்சி நெறிகளின் நிறைவு விழா செப்டம்பர் (5) ஆம் திகதி இடம்பெற்றன. இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக 58 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஏ.எல்.எஸ்.கே பெரேரா அவர்கள் வருகை தந்து பயிற்சிகளை நிறைவு செய்த படையினர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.

மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே அவர்களது வழிக்காட்டலின் கீழ் இந்த பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன.

பயிற்சி நிறைவு விழாவின் போது பயிற்சிகளை நிறைவு செய்த படையினரால் நிகழ்வுகள் முன்வைக்கப்பட்டன. இந்த பயிற்சி நெறியில் 20 படை வீரர்கள் பங்கேற்றினர்.

இந்த பயிற்சி நெறிகள் ஆங்கில பயிற்றுவிப்பாளரான கெப்டன் துஷார அந்தோனி அவர்களினால் மேற்கொள்ளப்பட்டன. url clone | [169220C] Stone Island Shadow Project (The North Face Black Box) – Hamilton Brown, Egret