Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th January 2020 15:51:58 Hours

இராணுவ எப்பரல் ஆடை தொழிற்சாலையை யக்கலை முகாமைத்துவ அங்கத்தவர்கள் பார்வையிடல்

இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் நிர்மல் தர்மரத்ன உட்பட இராணுவ எப்பரல் ஆடை தொழிற்சாலையின் முகாமைத்துவ அங்கத்தவர்கள் சமீபத்தில் யக்கல இராணுவ எப்பரல் ஆடை தொழிற்சாலை மற்றும் அதன் வளாகத்தையும் மேற்பார்வையிட்டனர்.

யக்கல இராணுவ எப்பரல் ஆடை தொழிற்சாலைக்கு வருகை தந்த முகாமைத்துவ குழுவினர்கள் உட்பட இராணுவ பொது நிர்வாக பிரதானியான மேஜர் ஜெனரல் டி.எஸ் பங்ஷஜயா, நிதி முகாமைத்துவ பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சந்தன குமார ஹந்துன்முல்ல,நிறைவேற்று ஜெனரல் மேஜர் ஜெனரல் நெவில் வீரசிங்க,குவேட்டர் மாஸ்டர் ஜெனரல் மேஜர் ஜெனரல் துமிந்த சிரிநாக, புனர்வாழ்வு பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ஷிரான் அபோசேகர, யுத்தஉபகரண மாஸ்டர் ஜெனரல் கேணல் மேனக பெணான்டோ ஆகியோர்களை இராணுவ எப்பரல் ஆடை தொழிற்சாலையின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மஞ்சுல மனதுங்க,யக்கல எப்பரல் ஆடை தொழிற்சாலையின் பிரதி கட்டளை தளபதி பிரிகேடியர் கபில ரணவீர உட்பட சிரேஷ்ட அதிகாரிகளால் வரவேற்கப்பட்டனர்.

வளாகத்திற்குள் வருகை தந்த முகாமைத்துவ அங்கத்தவர்கள் எப்பரல் ஆடை தொழிற்சாலையின் வெவ்வேறு பிரிவுகளை சோதனையிட்ட அவர்களுக்கு அந்தந்த பிரிவின் அதிகாரிகள் மற்றும் ஆணைசீட்டு அல்லாத அதிகாரிகளினால் தனித்தனியாக அவர்களின் உற்பத்தியின் செயல்பாடுகள் மற்றும் பணிகள் பற்றிய புது புது தயாரிப்பு முன்னேற்ற விளக்கங்கள் தொடர்பாக விளக்கப்படுத்தினர்.

மேலும், இந்த தொழிற்சாலைக்கு வருகை தருவதற்கு முன்னர், எப்பரல் ஆடை தொழிற்சாலையின் பிரதி கட்டளை தளபதி அவர்களால், முகாமைத்துவ முகாமைத்துவ அங்கத்தவர்களுக்கு தொழிற்சாலை தொடர்பாக பல விரிவுரைகள் வழங்கப்பட்டனர். best Running shoes | Autres