Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th January 2020 17:36:59 Hours

இராணுவத்தின் தலைமையில் அவுஸ்திரேலிய அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்ககான வழிபாடுகள்

2020ஆம் ஆண்டு வருட ஆரம்பத்தில் அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ இயற்கை அனர்த்தத்தின் காரணமாக பாதிப்பிற்குள்ளான உயிரிழந்த மிருகங்கள் மற்றும் நபர்களுக்கான ஆசிகளை வழங்கும் நோக்கில் மத வழிபாட்டு நிகழ்வானது நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாதுகாப்பு படைத் தலைமையகங்கள் பயிற்சிப் பாடசாலைகள் போன்றவற்றை உள்ளடக்கி இன்றைய தினம் (14) மாலை 7.00 மணியளவில் களனி ரஜமஹாவிகாரையில் அதிஷ்டான போதி பூஜை நிகழ்வு இடம் பெற்றது.

இந் நிகழ்வானது பதில் பாதுகாப்பு பிரதானி மற்றும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் தலைமையில் எம்மைச் சூழ உள்ள சூழலை சிறந்த நிலைக்கு முன்னெடுப்பதற்கான ஓர் சிறந்த உந்துகோளாக இவ் வழிபாடானது காணப்படுமெனும் நம்பிக்கைக்கமைவாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் செவ்வாய்க் கிழமை (14) மாலை களனி ரஜமஹா விகாரையில் இடம் பெற்ற அதிஷ்டான போதி பூஜை நிகழ்வானது பதில் பாதுகாப்பு பிரதானி மற்றும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் தலைமையில் அவுஸ்திரேலிய உயர்ஸ்தாணிகராலயத்தின் பாதுகாப்பு இணைப்பாளர் பல்லாயிரக்கனக்கான உயர் அதிகாரிகள் அதிகாரிகள் மற்றும் படையினர்கள் போன்றோரின் பங்களிப்போடு கிலம்பச மற்றும் செத் பிரித் வழிபாடுகள் பிரிகர நிகழ்வு மங்கள விளக்கேற்றல் வழிபாடுகள் போன்றன இடம் பெற்றன.

இம் மத வழிபாட்டு நிகழ்வானது மதிப்பிற்குறிய (கலாநிதி) கொள்ளுபிடியே மஹிந்த சங்கரக்கித நாயக்க தேரர் அவர்களின் தலைமையில் பல பௌத்த மத தேரர்களின் பங்களிப்போடு இராணுவத்தின் அழைப்பை ஏற்று அதிஷ்டான போதி பூஜை நிகழ்வானது சாது சாது எனும் பௌத்த மத ஆசிகளேர்டு மேற்கொள்ளப்பட்டது.

இந் நிகழ்வில் அவுஸ்திரேலிய காட்டுத்தீயினால் பாதிப்பிற்குள்ளாகி கொல்லப்பட்ட அப்பாவி மிருகங்கள் பறவைகள் போன்றவற்றிற்கான ஆசிகள் மற்றும் வழிபாடுகள் போன்றனவும் முன்னெடுக்கப்பட்டன. affiliate tracking url | Mens Flynit Trainers