Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

இராணுவத்தின் கஜபா சுபர்குரஸ்

இலங்கை இராணுவ 2017ஆம் ஆண்டிற்கான கஜபா சுபர்குரஸ் போட்டிகள் 17ஆவது தடவை ஓகஸ்ட் மாதம் (27)ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை சாலியபுரயில் ஆரம்பமானது. இப் போட்டிகளிற்கு இராணுவ மற்றும் சிவில் ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்விற்கு இராணுவ கஜபா படையணியின் கட்டளை தளபதியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா பிரதம அதிதியாக வருகை தந்தார். அவரை கஜபா படையணியின் பிரதி கட்டளை அதிகாரி கேர்ணல் எல்.எச்.எம் ராஜபக்ஷ வரவேற்று இந்த போட்டிகளை கட்டளை தளபதி ஆரம்பித்து வைத்தார். பின்பு வெற்றியீட்டவர்களுக்கு கட்டளை தளபதி மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளால் சான்றிதழ் மற்றும் வெற்றிக் கிண்ணங்கள் வழங்கப்பட்டது.

இப் போட்டியில் கலந்து வெற்றியீட்டவர்களின் விபரங்கள் கீழ்வருமாறு:

ஜீப் ஓட்டுனர் போட்டியில் இராணுவ மின்சார பொறியியல் கடையணியைச் சேர்ந்த லெப்டினன்ட் கேர்ணல் ஜே.கே.டீ.ஜி ஜயசிங்க மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளார்.

1275 சிறிய எஸ்.எல்.ஈ வாகன ஓட்டப் போட்டியில் இராணுவ மின்சார பொறியியல் கடையணியைச் சேர்ந்த லெப்டினன்ட் கேர்ணல் ஜே.கே.டீ.ஜி ஜயசிங்க மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளார்.

எஸ்டிடீ/எம்ஓடி 125சிசி மற்றும் எம்எக்ஸ் மோட்டார் சைக்கிள் போட்டிகளில் விஜயாபாகு காலாட் படையைச் சேர்ந்த கோப்ரல் பி.என் விஜயரத்ன மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளார்.

எம்எக்ஸ் 125 மோட்டார் சைக்கிள் போட்டியில் சமிக்ஞை படைவீரன் டீ.பி.கே சில்வா முதலாவது இடத்தைப் பெற்றுள்ளார்.

எம்எக்ஸ் 125 ஆரம்ப மோட்டார் சைக்கிள் போட்டியில் சமிக்ஞை படைவீரன் டீ.பி.கே சில்வா இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார்.

எம்எக்ஸ் 250 மோட்டார் சைக்கிள் போட்டியில் சமிக்ஞை படைவீரன் டீ.பி.கே சில்வா மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளார்.

எம்எக்ஸ் 125சிசி , 250 மற்றும் ஆரம்ப மோட்டார் சைக்கிள் போட்டியில் இலங்கை இராணுவ சேவையணியைச் சேர்ந்த சாதாரண போர் வீரர் ஏ.டப்ள்யூ.எல்.ஜே குமாரசிங்க இரண்டாவது,மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தைப் பெற்றுள்ளார்.

Sports brands | Zapatillas de running Nike - Mujer