Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd July 2019 15:50:11 Hours

இராணுவத்தின் ஏற்பாட்டில் போதைப்பொருள் தடுப்பு நிகழ்ச்சி திட்டம்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் 57 ஆவது படை பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் ஏ எஸ் ஹேவாவிதாரன அவர்களது பணிப்புரைக்கமைய மேற்கொள்ளப்பட்ட போதைப் பொருள் தடுப்பு நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் அரச பாடசாலைகளில் ஜுன் மாதம் 26 – 27 ஆம் திகதிகளில் போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பான விரிவுரைகள் மேற்கொள்ளப்பட்டன.

572, 573 ஆவது படைத் தலைமையகத்தின் கீழுள்ள 3 ஆவது கஜபா படையணி, 9 ஆவது விஜயபாகு காலாட் படையணி மற்றும் 14 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியின் பூரண ஏற்பாட்டுடன் மேற்கொள்ளப்பட்ட போதைப் பொருள் ஒழிப்பு நிகழ்ச்சி திட்டங்களில் அரச பாடசாலையைச் சேர்ந்த 321 மாணவர்கள், 21 ஆசிரியர்கள், 81 படை வீரர்கள் மற்றும அரச ஊழியர்கள் இணைந்திருந்தனர்.

65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் வசந்த குமாரப்பெரும அவர்களது வழிக்காட்டலின் கீழ் 652, 653 படைத் தலைமையகங்களுக்கு கீழுள்ள 10 வது இலேசாயுத காலாட் படையணி, 17 (தொ) இலேசாயுத காலாட் படையணி, 20 (தொ) விஜயபாகு காலாட் படையணியினது பூரண ஏற்பாட்டுடன் 82 மாணவர்கள், 4 ஆசிரியர்கள், 4 அதிகாரிகள் 103 படை வீரர்களது பங்களிப்புடன் ஜூன் மாதம் 26 – 27 ஆம் திகதிகளில் போதைப் பொருள் ஒழிப்பு நிகழ்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிகழ்ச்சி திட்டங்களில் அக்கராயன்குளம் பொலிஸார் மற்றும் 7 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியும் ஒத்துழைப்பை வழங்கியது.

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்களது வழிக்காட்டலின் கீழ் 11 (தொ) கஜபா படையணி, 20 (தொ) விஜயபாகு காலாட் படையணி மற்றும் 7 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியின் பூரண ஏற்பாட்டுடன் கரியாலங்கபடுவான் இரு பாடசாலைகளிலும், கோனாவில் மற்றும் அக்கராயம்குளம் பாடசாலையிலும் போதை பொருள் ஒழிப்பு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிகழ்வுகளில் ஆலோசகர் திரு எஸ் ஐ கே விநோத் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் எம் எல் ஜே பி கே சேனாரதன் முழங்காவில் பொலிஸ் நிலையம் இவர்களால் விரிவுரைகள் மேற்கொள்ளப்பட்டன அத்துடன் 700 மாணவர்களும் பங்கேற்றுக் கொண்டனர். Best jordan Sneakers | Womens Shoes Footwear & Shoes Online