Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd June 2017 11:20:07 Hours

இராணுவத்தினர் தொடர்ந்தும் அனர்த்த பணிகளில்

முப்படையினரும் அரச திணைக்களமும் இணைந்து வெள்ளத்தினால் பாதிப்புக்கு உள்ளான பிரதேசங்களில் பலவேறுபட்ட அனர்த்த நிவாரண உதவி பணிகளை தொடர்கின்றனர்.

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகம், 14 ஆவது படைப் பிரிவு, 58 ஆவது படைப் பிரிவு, 141 மற்றும் 142 படைத் தலைமையகம், 581, 582 மற்றும் 583 ஆவது படைத் தலைமையகம், கடற்படை , விமானப்படை மற்றும் வெவ்வேறு உதவி நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் கொழும்பு, கம்பஹ, காலி, மாத்தறை, களுத்தறை, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் அமைந்துள்ள விகாரை, பாடசாலை, ஆலயம், பூஜை மண்டபங்கள், தொழிற்சாலைகள், மக்கள் சுகாதார மத்திய நிலையத்தில் அமைந்துள்ள தற்காலிகமான 208 உதவி மத்திய நிலையங்களுக்கான நிவாரண பணிகளை மேற்கொள்கின்றன.

12 ஆவது பொறியியலாளர் படையணியினரால் முதலாம் திகதி வியாழக் கிழமை இராணுவத்தின் இயந்திர வாகனங்களை கொண்டு அத்வெல்தொட -ஹரபகந்த பாதைக்கு அருகாமையில் உள்ள மண் மேடுகள், மற்றும் தடையாயிருந்த அனைத்து பொருட்களையும் இந்த படையணியினர் அகற்றினர். அத்துடன் பொறியியலாளர் சேவை படையணி மற்றும் காலாட் படையினர் இணைந்து களுத்தறை மற்றும் இரத்தினபுரி பிரதேசத்தில் பாதிப்படைந்திருந்த கிணறுகளை சுத்திகரிக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்கவினால் வியாழக்கிழமை முதலாம் திகதி அகலவத்த பரகொட பிரதேசத்தில் அனர்த்த விபத்துகளுக்கு பாதிப்புக்கு உள்ளான பொதுமக்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.

Running sports | Air Jordan