Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th July 2018 16:15:07 Hours

இராணுவத்தினரின் ஏற்பாட்டில் பூனகிரி பாடசாலை மாணவர்கள் கல்வி சுற்றுலா

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமைகத்திற்கு கீழ் இயங்கும் 66, 662 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் பூனகிரி முட்கோம்பன் மஹா வித்தியாலய மாணவர்கள் வடக்கு மாகாணத்திற்கு கல்வி சுற்றுலாவை மேற்கொண்டனர்.

66 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் ஜி.டப்ள்யூ.டீ.கே ஜயதிலக அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய 20 ஆவது இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை தளபதியினால் இந்த கல்வி சுற்றுலா ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த மாணவர்கள் கல்வி சுற்றுலாவின் நிமித்தம் வட பகுதியில் உள்ள சங்குப்பிட்டி பாலம், நிலவராஜ் அடிமட்டமில்லாத கிணறு, தம்பகோலபடுன, நகுலேஸ்வரம் கோயில். காங்கேசன்துறை சீமேந்தி தொழிற்சாலை, கீரிமலை கேணி, காங்கேசன்துறை வெளிச்சவீடு, யாழ்ப்பாண துர்க்கை அம்மன் கோயில், யாழ் பொது நூலகம், நாகதீப விகாரை, நல்லூர் கோயில் மற்றும் ரியோ ஐஸ்கிரிம் கடைகளுக்கும் சென்றிருந்தனர்.

வறிய குடும்பத்தைச் சேர்ந்த இந்த பாடசாலை மாணவர்களுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இராணுவத்தினரால் இந்த கல்வி சுற்றுலா ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

Running sport media | Buy online Sneaker for Men