Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th March 2019 11:47:02 Hours

இராணுவத்தினரால் வறிய குடும்பத்தார் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு உதவிகள்

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 233, 231 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்து வரும் 35 குடும்பத்தாருக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் 2000/= ரூபாய் பெறுமதிமிக்க உலர் உணவு பொருட்கள் நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டன.

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 28 ஆவது ஆண்டு பூர்த்தி நிறைவை முன்னிட்டு இந்த நிகழ்வுகள் பெப்ரவாரி மாதம் 26 ஆம் திகதி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

மேலும் வாகரை கிராமிய வைத்தியசாலையில் உள்ள நோயாளர்களுக்கு 233 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் ஆர்.எல்விடிகல அவர்களது தலைமையில் பகல் உணவு பகிர்ந்தளிக்கப்பட்டன.

கரவெட்டியாறு விஜித வித்தியாலயம் மற்றும் எருனுவில் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் வறிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு 231 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வானது பெப்ரவாரி மாதம் 20 ஆம் திகதி கரவெட்டியாறு விஜித வித்தியாலய வளாகத்தினுள் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் 231 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி, 231 ஆவது படைப் பிரிவின் இராணுவ தொடர்பாடல் அதிகாரி, 4 ஆவது கெமுனு காலாட் படையணியின் கட்டளை அதிகாரி, 11 ஆவது (தொண்டர்) இலங்கை சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரி போன்றோர் இணைந்திருந்தனர். latest Nike release | 【海外近日発売予定】 サウスパーク × アディダス オリジナルス キャンパス 80S "タオリー" (GZ9177) - スニーカーウォーズ