Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th January 2019 22:55:31 Hours

இராணுவத்தினரால் பாடசாலைகளில் சிரமதான பணிகள்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 65 மற்றும் 653 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் தெரன்கண்டல் தமிழ் கலவன் பாடசாலையில் (03) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை இராணுவத்தினரது ஒத்துழைப்புடன் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் வசந்த குமாரப்பெரும அவர்களது பணிப்புரைக்கமைய 653 ஆவது படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 21 ஆவது (தொண்டர்) இலேசாயுத காலாட் படையணியின் 30 இராணுவ படையினரது பங்களிப்புடன் இந்த சிரமதான பணிகள் இடம்பெற்றது.

மேலும் 57 ஆவது படைப் பிரிவிற்கு கீழ் இயங்கும் 573 ஆவது படைத் தலைமையகத்திலுள்ள படையினரது பங்களிப்புடன் வட்டக்கச்சி தமிழ் கலவன் பாடசாலை வளாகத்தினுள் சிரமதான பணிகள் (4) ஆம் திகதி வெள்ளிக் கிழமை மேற்கொள்ளப்பட்டன. Nike sneakers | THE SNEAKER BULLETIN