Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

இராணுவத்தினரால் சாதார பொது தராதர பரீட்சைக்கு செல்லும் மாணவர்களுக்கு கருத்தரங்கு

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்களது வழிக்காட்டலின் கீழ் நவம்பர் மாதம் 18, 19 ஆம் திகதிகளில் ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தில் சாதாரண பொது தராதர பரீட்சைக்கு செல்லும் மாணவர்களுக்கு கருத்தரங்குகள் இடம்பெற்றன.

இரண்டு நாட்கள் இடம்பெற்ற இந்த கருத்தரங்கிற்கு முல்லைத்தீவு பிரதேசத்தைச் சேர்ந்த 171 பாடசாலை மாணவர்கள் இணைந்து கொண்டனர்.

இந்த கருத்தரங்கில் கணிதம் மற்றும் விஞ்ஞான பாடத்தில் தேர்ச்சி பெற்ற சிரேஷ்ட விரிவுரையாளரான எஸ். ராஜேந்திரன் உப விரிவுரையாளர்களான சி. சுதேஸன் ,ரயடீவன்,அச்சுதன் அவர்கள்விரிவுரைகள் நிகழ்த்தினார்கள்.

இந் நிகழ்விற்கு 64 ஆவது படைத் தளபதி பிரிகேடியர் ஜயந்த ஜயவீர, 641 ஆவது படைத் தலைமையகத்தின் தளபதி பிரிகேடியர் நிஷாந்த மானகே, ஒட்டுசுட்டான் கல்வி வலயப் பணிப்பாளர் பங்கைசெல்வம், பாடசாலை அதிபரான கே. ஜேகேஸ்வரன், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் சாதாரண பொது தராதர பரீட்சைக்கு செல்லும் முல்லைத்தீவு மாணவர்களுக்கு கல்வி கருத்தரங்கு மாரிடையம்பத்து பிரதேச செயலாளர் காரியாலய கேட்போர் கூடத்தில் (18) ஆம் திகதி இடம்பெற்றது.

இந்த கருத்தரங்கில் கணிதம்>விஞ்ஞானம் போன்ற பாடங்களின் விரிவுரைகள் பேராசிரியர்களான முதுராசா சிவனேஸ்வரன் மற்றும் அரிவாசாவினால் நிகழ்த்தப்பட்டன. இக்கருத்தரங்கிற்கு 115 பாடசாலை மாணவர்கள் கலந்து நற்பயனை பெற்றுக்கொண்டனர்.

இந்த கருத்தரங்கின் ஏற்பாடுகள் அனைத்தும் 59 ஆவது படைத் தளபதி மேஜர் ஜெனரல் வன்னியாரச்சி அவர்களின் வழிக்காட்டலில் இடம்பெற்றது.

latest Nike release | Air Jordan 1 Retro High OG 'University Blue' — Ietp