Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd February 2018 23:42:17 Hours

இராணுவத்தினரால் கிளிநொச்சி பாடசாலை மாணவர்களுக்கான கருத்தரங்கு

கிளிநொச்சிப் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்களின் வழிகாட்டலின் கீழ் 57ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியவர்களின் தலைமையில் கிளிநொச்சி பாடசாலை மாணவர்களுக்கான கொல்ப் கருத்தரங்கு இலங்கை கொல்ப் தொழிற் சங்கத்தின் தலைமையில் இடம் பெற்றது.

மேலும் இக் கருத்தரங்கு 57ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

இக் கருத்தரங்கானது கொல்ப் அபிவிருத்தி மற்றும் கொல்ப் விளையாட்டு ஆலோசகரும் இலங்கை கொல்ப் தொழிற் சங்கத்தின் திரு அணில் பெரேரா அவர்களின் தலைமையில் இவ் விளையாட்டுக்கள் முன்னெடுக்கப்பட்டது. அத்துடன் இவ் விளையாட்டானது உலகலாவிய ரீதியில் சிறந்த போட்டியாளர்களை உருவாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டது.

மேலும் இலங்கை கொல்ப் தொழிற் சங்கமானது இத் திறந்த வெளி கொல்ப் போட்டிகளை அனுராதபுரையில் உள்ள விமானப் படை ஸ்தலத்தை அண்மித்த பிரதேசத்தில் இடம் பெற்றது.

அத்துடன் இக் கருத்தரங்கானது கிளிநொச்சி சென்றல் கல்லுhரியைச் சேர்ந்த 50 மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

அந்த வகையில் கடந்த 30 வருட கால பயங்கரவாத யுத்தத்தினால் கிளிநொச்சிப் பிரதேசத்தில் பாதிக்கப்பட்;ட வாலிபர்களின் திறனை மேம்படுத்தும் நோக்கில் இக் கருத்தரங்கு மேற்கொள்ளப்பட்டது.

இப் பயிற்ச்சிப் பட்டறைகள் கிளிநொச்சி சென்றல் கல்லுாரி மைதானத்தில் வார இறுதி நாட்களில் இடம் பெற்றதுடன் மேலும் இப் பயிற்ச்சிகள் வட மாகாணத்தை உள்ளடக்கும் வகையில் நடாத்தப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இப் பயிற்ச்சிகளை இலங்கை கொல்ப் தொழிற் சங்கத்தின் நன்கு பயிற்றப்பட்ட பயிற்றுவிப்பாளர்களான திரு எச் எல் பி ஹெமந்த திரு கே சௌந்தர்ராஜ் மற்றும் திரு இஷான் கமகே போன்றோர் மேற்கொண்டனர்.

Mysneakers | Nike for Men