Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th November 2018 19:45:41 Hours

இராணுவத்தினரது ஒத்துழைப்புடன் இடம் பெற்ற நன்கொடை நிகழ்வு

மடு கச்சானமரதமடு பிரதேசத்தில் வசிக்கும் வறிய குடும்பத்தைச் சேர்ந்த அங்கவீனமுற்ற 16 நபர்களுக்கு உதவியளிக்கும் நோக்கத்துடன் 61 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் செயற்கை உறுப்புக்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வு 613 ஆவது படைத் தலைமையகத்தின் முழுமையான ஒத்துழைப்புடன் (03) ஆம் திகதி சனிக் கிழமை இடம்பெற்றது. இராணுவத்தினரது வேண்டுகோளுக்கமைய குண்டசாலையில் அமைந்திருக்கும் அங்கவீன மத்திய நிலையத்தின் அனுசரனையில் இந்த செயற்கை உறுப்புகள் இந்த அங்கவீனமுற்ற நபர்களுக்கு விநியாகிக்கப்பட்டன.

இந்த செயற்கை உறுப்புக்கள் 45,000/=, 75,000/=, 35,000/= ரூபாய் பெறுமதிமிக்கதியாகும். இந்த நபர்களது செயற்கை உறுப்புக்கள் 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8 ஆம் திகதி அளவெடுத்து இம் மாதம் (3) ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வில் இந்த செயற்கை உறுப்புக்கள் அங்கவீனமுற்ற நபர்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன.

மேலும் 61 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் கே.டி.சீ.ஜே.ஜீ திலகரத்ன அவர்களது பூரண ஒத்துழைப்புடன் 80,000 ரூபாய் பெறுமதி மிக்க பாடசாலை உபகரணங்கள் அப்பிரதேசத்தில் குறைந்த வருமானத்தை பெறும் குடும்ப உறுப்புனர்களின் பிள்ளைகளுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக 54 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் டபள்யூ.ஜீ.எச்.ஏ.எஸ் பண்டார அவர்கள் வருகை தந்தார். மேலும் அனைத்து சமய தலைவர்களும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளனர். அத்துடன் 611 ஆவது படைத் தளபதி பிரிகேடியர் எவ்.டீ.எஸ்.எஸ். லியனகே, 613 ஆவது படைத் தளபதி மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்து கொண்டனர். Buy Kicks | Womens Shoes Footwear & Shoes Online