Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th April 2019 10:57:28 Hours

இந்திய சமிக்ஞை பயிற்றுவிப்பாளர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

ஒரு மகளீர் அதிகாரியை உள்ளடக்கி 15 இந்திய இராணுவத்தினர்கள் பயிற்சி இல – 14 இன் கீழ் 12 கிழமைகள் கண்டியிலுள்ள சமிக்ஞை படையணி பயிற்சி முகாமில் பயிற்சிகளை மேற்கொண்டனர்.

இந்த பயிற்சி நிறைவு விழா இம் மாதம் (5) ஆம் திகதி கண்டியிலுள்ள சமிக்ஞை பயிற்சி பாடசாலையில் இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ சமிக்ஞை பிரதானி மேஜர் ஜெனரல் நிலந்த ஹெட்டியாரச்சி அவர்கள் வருகை தந்து சிறப்பித்தார்.

இந்த நிகழ்வில் வாழத்துரை சமிக்ஞை பயிற்சி பாடசாலையின் கட்டளை அதிகாரி கேர்ணல் இமல் அசலாரச்சி அவர்களினால் ஆற்றப்பட்டது.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்த இராணுவ சமிக்ஞை பிரதானி இந்திய இராணுவ பயிற்சியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இவர்கள் இந்த பாடசாலையில் தகவல் தொழில்நுட்ப பயிற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11 ஆம் திகதி தொடக்கம் இம் மாதம்ஏப்ரல் 9 ஆம் திகதி வரை இந்த பயிற்சிகளை மேற்கொண்டனர். இந்த பயிற்சியில் இராணுவ அதிகாரியான மேஜர் ஆங்கட் பல் ருப்ரா மற்றும் இரண்டு இந்திய போர் வீரர்களான ஹவல்டர் டீபக் சிங் மற்றும் சுபேதர் சுரேஷ் அன்னாமலை போன்றவர்கள் பயிற்சிகளை சிறப்பாக மேற்கொண்டு சிறப்பு தேர்வுகளை பெற்றுள்ளனர்.

இராணுவ சம்பிரதாயமுறைப்படி சமிக்ஞை பிரதானிக்கு பயிற்சி பாடசாலை நுழைவாயிலில் வைத்து இராணுவ மரியாதை அணிவகுப்புகள் வழங்கி வைக்கப்பட்டன.பின்னர் சமிக்ஞை பிரதானிக்கு பயிற்சி பாடசாலை கட்டளை அதிகாரியினால் நினைவுச் சின்னப் பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

சமிக்ஞை பிரதானி பயிற்சி பாடசாலையிலுள்ள இராணுவத்தினருடன் தேநீர் விருந்துபசார நிகழ்விலும் கலந்து கொண்டு படையினரது சுக செய்திகளை ஆராய்ந்து படையினருடன் கலந்துரையாடலையும் மேற்கொண்டார். இறுதியில் பிரமுகர்களின் வருகையை முன்னிட்டு கையொப்பமிடும் புத்தகத்திலும் சமிக்ஞை பிரதானி கையொப்பமிட்டார்.Nike shoes | adidas NMD Human Race