Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th April 2019 16:43:06 Hours

ஆரோக்கியமான இராணுவம் - ஆரோக்கியமான நாடு' எனும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் சபுகஸ்கந்த படையினருக்கு விரிவுரை

ஆரோக்கியமான இராணுவம் - ஆரோக்கியமான நாடு' எனும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் சபுகஸ்கந்த பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் ஸ்டாப் கல்லூரிக்கும் சிறுநீரக செயலிழப்பு, இதயத்தை தாக்கும் நோய் நீரிழிவு, கொலஸ்ட்ரால், உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றின் காரணமாக இராணுவத்தினர் மத்தியில் இயலாமை மற்றும் இறப்பு (நோயுற்ற தன்மை மற்றும் இறப்பு விகிதம் அதிகரிப்பு ) போன்றவைகளை குறைக்கும் நிமித்தம் கடந்த (02) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை சிறப்பு விரிவுரை வழங்கப்பட்டது.

'ஆரோக்கியமான இராணுவம் - ஆரோக்கியமான நாடு'எனும் திட்டத்தின் கீழ் இடம் பெற்ற இந்த விரிவுரையானது இராணுவத்தினர் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறும் போது தொற்று நோய்கள் அல்லது சுகாதார சிக்கல்களில்தவிர்க்க முடியாமல் என்று பாதிக்கப்படக்கூடிய நிலைமைகள் இருந்து பாதுகாப்பதற்காக ஒழுங்கமைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சி திட்டத்தின் மூலம் பிரிகேடியர் ஏ.எஸ்.எம் விஜயவர்தன அவர்களால் உடலில் உள்ள கொழுப்பு தாக்கத்தில் இருந்து எப்படி பாதுகாத்துக் கொள்வது மற்றும் அவர்களது வினாக்களுக்கு தெளிவுபடுத்துவதற்கும அதிகாரிகளோடு தொடர்புகொள்வது எப்படி என்றும் விரிவுரை வழங்கினார் அத்துடன் தொற்று நோய்கள் மற்றும் தொடர்பற்ற நோய்கள்' பற்றிய விரிவுரை ஒன்றை மருத்துவர் லெப்டினன்ட் கேணல் எம்.ஏ.எஸ். குரே அவர்களால் வழங்கப்பட்டதுடன், விளைவுகள், தன்னியக்க மேலாண்மை' தொடர்பாக ஆலோசகர் உளவியரான ரவிமால் கலப்பதி அவர்களால் மற்றும்ஆரோக்கியமான உணவு தொடர்பாக லெப்டினென்ட் ஏ.சி.கே.உடுகம அவர்களால் விரிவுரைகள் வழங்கப்பட்டன. spy offers | Best Nike Air Max Shoes 2021 , Air Max Releases and Deals