Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th May 2018 17:08:07 Hours

அவயங்களை இழந்த படை விரரது திருமண நிகழ்வு

இலங்கை 7 ஆவது சிங்கப் படையணியைச் சேர்ந்த சாஜன் ஈ.ஏ.எஸ் ஏகநாயக அவர்களது திருமண வைபவம் அம்பேபுஸ்ஸவில் அமைந்துள்ள சிங்கப் படையணி தலைமையகத்தில் (24) ஆம் திகதி இடம்பெற்றன. இவர் பயங்கரவாத யுத்தத்தின் போது நாட்டிற்காக அவயங்களை இழந்து அங்கவீனமுற்று பாங்கொல்லையில் அமைந்துள்ள அபிமங்சல 111 மத்திய நிலையத்தில் கடமை புரிந்து வருகினறார்.

இந்த திருமண வைபவத்திற்கு சிங்கப் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பியல் விக்ரமரத்ன மற்றும் ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவி திருமதி அனோமா பொன்சேகா அவர்கள் வருகை தந்து இந்த தம்பதிகளை வாழ்த்தி கல்யாணத்திற்கு சாட்சியாளர்களாக கையொப்பமிட்டனர்.

இந்த படை விரர் மதுமி லங்கா ஹேமாலி அவர்களை தனது வாழ்க்கை துணைவியாக தேர்ந்தெடுத்தார். இவரது திருமண வைபவத்தின் அனைத்து ஒழுங்குகளும் இலங்கை சிங்கப் படையணியினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த திருமண நிகழ்விற்கு ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவி திருமதி அனோமா பொன்சேகா, சிங்கப் படையணியின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி ருவானி சுஜீவ விக்ரமரத்ன , சிங்கப் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பியல் விக்ரமரத்ன, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சந்தன ராஜகுரு, மேஜர் ஜெனரல் துமிந்த ராஜகுரு, மேஜர் ஜெனரல் எல்.எப் கஸ்தூரியாரச்சி, பிரிகேடியர் ஹேமந்த குலதுங்க, பிரிகேடியர் அஜித் பல்லாவெல, சிங்கப் படையணியின் சேவா வனிதா பிரிவின் அங்கத்தவர்கள் இணைந்திருந்தனர்.

Running sneakers | nike air force 1 shadow , eBay