Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th February 2018 10:12:09 Hours

அவயங்களை இழந்த இராணுவத்தினருக்கு சிரிபாதரின் ஆசிர்வாதம்

பாதுகாப்பு அமைச்சு, இராணுவ தளபதி மற்றும் புணர்வாழ்வு பணியகத்தின் முழுமையான ஒத்துழைப்புடன் ‘ சுமன ரணவிரு உதவி மன்றம்’ அமைப்பாளர் பூஜய தரணகம சுமணரத்ன தேரர் அவர்களின் ஏற்பாட்டில் பெப்ரவாரி மாதம் 16 ஆம் திகதி தொடக்கம் 17 ஆம் திகதி வரை நாளைய நாள் நன்றாக அமைய வாழ்க்கையை தியாகம் செய்த அவயங்களை இழந்த இராணுவ வீரர்கள் 12 உள்ளடக்கிய குழுவொன்று சிறிபாதமலை யாத்திரை நிமித்தம் சென்றுள்ளனர்.

கட்டுநாயக, ஆண்டிஅம்பல, ஜயராஜராம விகாரையின் விகாராதிபதி சுமனரத்ன தேரர் ‘ சுமன ரணவிரு உதவி மன்றத்தின்’ எற்பாட்டில் கடந்த 18 வருட காலமாக அவயங்களை இழந்த 550 படை வீரர்கள் இந்த யாத்திரை நிமித்தம் அழைத்து சென்றனர்.

நல்லதன்னிய பிரதேசத்தில் ஆரம்பமான இந்த யாத்திரைகளுக்கு மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மள் டயஸ் அவர்களது பணிப்புரைக்கமைய இவர்களுக்கு இராணுவத்தினரால் உதவி வழங்கப்பட்டுள்ளன.

பூஜய தரணகம சுமனரத்ன அவர்களின் வழிப் பாதையின் ஊடாக பிரதி பதவி நிலை உத்தியோகத்தர் மற்றும் கெமுனு ஹேவா படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் தம்பத் பெர்ணாந்துகே ஆலோசனைக்கமையக குருவிட பிரதேசத்தில் கெமுனு ஹேவா படையணியினால் இந்த யாத்திரிகளுக்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்த யாத்திரைகளுக்கான தொடர்பாடல் இராணுவ தளபதி மற்றும் புணர்வாழ்வளிப்பு பணியகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் சாந்த திருநாவுக்கரசு அவர்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த யாத்திரைகள் சிறிபாதமலை உடமலுவைக்கு சென்று பூஜய தரணகம சுமனரத்ன தேரர்களினால் பௌத்த சமய ஆசீர்வாத நிகழ்வுகள் இடம்பெற்றன.

Sportswear Design | adidas