Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th August 2019 11:30:50 Hours

அருகம் குடாவில் இராணுவ நபர்கள் மரதன் போட்டிகளில் கலந்து “பை விருதுகள்“ (Bag Awards ) பெறுகை

அருகம் குடா மேம்பாட்டு மன்றத்தின் ஏற்பாட்டில் “இலங்கையின் எழுச்சி” எனும் தொனிப்பொருளின் கீழ் ஒழுங்கு செய்யப்பட்ட “ஹல்ப் மரதன்” போட்டிகள் “ அருகம் குடா சுற்றுலா விடுதியில் இம் மாதம் (16) ஆம் திகதி இடம்பெற்றது.

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 24, 242 ஆவது படைத் தலைமையகத்தின் பூரன ஒத்துழைப்புடன் 17 வயதிலிருந்து 45 வயது வரையான நபர்களுக்கான மரதன் போட்டிகள் அருகம் குடா மேம்பாட்டு மன்றத்தின் தலைவரான திரு M.S.M வஷித் அவர்களது தலைமையில் இடம்பெற்றது.

10 கிலோ மீற்றர் தூரத்திற்கான 17 வயதிலிருந்து 45 வயதினர்களுக்கு இடையிலான போட்டிகளில் முதலாவது இடத்தை 7 ஆவது சிங்கப் படையணியைச் சேர்ந்த போர் வீரன் K.A.V.D காரியவஷமும், இரண்டாவது இடத்தை 16 ஆவது சிங்கப் படையணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் D.W.A தொடன்வத்தையும், மூன்றாவது இடத்தை 8 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியைச் சேர்ந்த போர் வீரன் R.M.V ரத்னாயக அவர்கள் பெற்றுக் கொண்டனர்.

21 கிலோ மீற்றர் தூரத்திற்கான 17 வயதிலிருந்து 42 வயதினர்களுக்கு இடையிலான போட்டிகளில் முதலாவது இடத்தை 5 ஆவது சிங்கப் படையணியைச் சேர்ந்த போர் வீரன் K.N மதுரங்கவும், இரண்டாவது இடத்தை 16 ஆவது சிங்கப் படையணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் M.A.A பண்டார , அவர்களும் பெற்றுக் கொண்டனர்.

3 ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியைச் சேர்ந்த லெப்டின ன்ட் கேர்ணல் R.S.C திசாநாயக அவர்கள் 45 ஆவது வயதினருக்கு இடையில் இடம்பெற்ற போட்டிகளில் பங்கேற்றிக் கொண்டு மூன்றாவது இடத்தை பெற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்வில் அருகம் குடா மேம்பாட்டு மன்றத்தின் தலைவர் திரு M.S.M வஷித், 242 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் தமித ரணசிங்க, “அப்ரோட விலாஷ்” விடுதியின் பணிப்பாளர் திரு பிரசாத் லியனாரச்சி, அருகம் குடா மேம்பாட்டு மன்றத்தின் செயலாளர் திரு S.T ஜகுபர், இந்த மன்றத்தின் சிரேஷ்ட அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர். Nike sneakers | adidas Ultra Boost 1.0 DNA ZX 9000 Mint - Grailify