Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th August 2017 16:37:24 Hours

அமெரிக்க இராணுவப் பிரதிநிதிகள் இலங்கைப் போர் வீரர்களின் நினைவு துாபிக்கு அஞ்சலி

இலங்கையில் பத்தரமுல்லையில் அமைந்துள்ள முப்படையினரது நினைவு துாபிக்கு முதல் தடவையாக அமெரிக்க இராணுவ பிரதிநிதிகள் ஐவர் (30)ஆம் திகதியான இன்று வருகை தந்து தங்களது அஞ்சலிகளை செலுத்தினர்.

அவுஸ்திரேலியா இராணுவத்தின் மேஜர் ஜெனரல் ரோஜர் ஜே நோபல் தலைமையிலான 5 உறுப்பினர்களைக் கொண்ட அமெரிக்க இராணுவ பிரதிநிதிகள், ஆஸ்திரேலியாவில் உள்ள அமெரிக்க இராணுவ பசிபிக் கட்டளைத் தலைமையகத்தில் தலைமையிடமாக பணிபுரிந்த அவுஸ்திரேலியா இராணுவத்தின் தலைமையில், ஆகஸ்ட் 28 - 29 ஆம் திகதி கொழும்பின் பாதுகாப்பு கருத்தரங்கிற்கு வருகை தந்த சமயத்தில் இந்த வருகையை மேற்கொண்டனர்.

மேஜர் ஜான் , மேஜர் மைல்ஸ் எ பேக்கர் மற்றும் அமெரிக்க இராணுவத்தின் கெப்டன் யெரெமி டிக்சன் ஆகிய அமெரிக்க பிரதிநிதிகள் வருகை தந்தனர். இவர்கள் இலங்கை யுத்தத்தின் போது மரணித்த முப்படையினரது நினைவு துாபிக்கு அஞ்சலி செலுத்துவதற்கு வருகை தந்தனர். இவர்களுடன் இலங்கைக்கான அமெரிக்க துாதரகத்தின் பாதுகாப்பு உபதேசகர் லெப்டினன்ட் கேணல் டக்ளஸ் ஹெஸ் அவர்களும் வருகை தந்தார். இந்த அதிகாரிகளை இலங்கை இராணுவ ஆளனி நிர்வாக பணியகத்தின் சிரேஷ்ட அதிகாரியான கேர்ணல் அனில் இளங்ககோனினால் வரவேற்று இவர்களுக்கான அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டிருந்தது. இந்த அமெரிக்க இராணுவ பிரதிநிதிகளை இலங்கை இராணுவத்தின் இணைப்பு தொடர்பாடல் அதிகாரியான கேர்ணல் லங்கா அமரபால அவர்கள் அழைத்து வந்தார்.

தேசிய போர் வீரர்களின் நினைவூட்டல், நிகழ்வில்இராணுவப் பொலிஸ் பிரிவின் கடமை இடம்பெற்றது. இந்த பிரதிநிதிக் குழுவினரின் தலைவரான மேஜர் ஜெனரல் ரோஜர் ஜே. ,மேஜர் ஜெனரல் நோபல் இராணுவ மரியாதைகளுடன் மலர் மாலை வைத்து பயங்கரவாதத்திற்கு எதிராக போராடிய போது நாட்டின் நிமித்தம் உயிர் தியாகம் செய்த இலங்கை முப்படை வீரர்களுக்கு இந்த பிரதிநிதிகள் தங்களது அஞ்சலிகளை செலுத்தினர். இந்த நிகழ்விற்கு இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

short url link | Air Jordan Release Dates 2020