Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd July 2019 13:54:17 Hours

அபிமன்சல 1 இல் இடம் பெற்ற படைவீரரின் திருமணம்

2009 ஆம் அண்டு மே மாதத்திற்கு முன் எல்ரீரீஈ பயங்கரவாத தாக்குதலுக்கு எதிரான போராட்டத்தின் போது அங்கவீனமுற்றவராகிய இலங்கை இராணுவ கெமுனு ஹேவா படையணியின் படைவீரர், அனுராதபுரத்தில் உள்ள அங்கவீனமுற்றவர்களுக்கான வதிவிடமான அபிமன்சல 1 வளாகத்தில் கடந்த (28) அம் திகதி வெள்ளிக்கிழமையன்று திருமணபந்தத்தில் இணைந்து கொண்டார்.

இம் மாற்று திறனாளியான 7 ஆவது இலங்கை இராணுவ கெமுனு ஹேவா படையணியின் கோப்ரல் ஐ.எஸ்.ஆர் சஞ்ஜீவ குமார அவர்கள் 2008 ஆம் ஆண்டு ஏப்பிரல் 24 ஆம் திகதி மன்னாரில் எல்ரீரீஈ பயங்கரவாத தாக்குதலுக்குள் எதிரான போராட்டத்தின் போது காயமடைந்த இவர் தனது வாழ் நாள் முழுவதும் அங்கவீனமுற்றவராக இருந்தார். இவர் 2009 ஆம் ஆண்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பின்னர் அபிமன்சல 1 வதிவிடத்திற்கு இடம் மாற்றப்பட்டார்.

7 ஆவது இலங்கை இராணுவ கெமுனு ஹேவா படையணியின் கோப்ரல் ஐ.எஸ்.ஆர் சஞ்ஜீவ குமார அவர்கள் அபிமன்சல 1 வதிவிடத்தை பார்வையிடுவதற்காக சென்ற செல்வி ஷானிக்கா நிரோஷினி அவர்களை திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமணம் நிகழ்வானது அபிமன்சல 1 வதிவிடத்தின் முன்னாள் தளபதி பிரிகேடியர் ஜே.வெலிமுன அவர்களின் அறிவுறத்தலுக்ககைமய இடம் பெற்றதோடு திருமண சாட்ச்சியத்திற்கான கையொம்பமிட்டார். அபிமன்சல 1 வதிவிடத்தின் தளபதி கேணல் ஐ.எச்.எம்.டி.எச் செனரத் அவர்களும் திருமண சாட்ச்சியத்திற்கான கையொம்பமிட்டார். இந்த திருமணத்திற்காகன அனைத்து ஏற்பாடுகளும் இராணுவ புனர்வாழ்வூ பணியகத்தின் ஒருங்கமைப்புடன் இடம் பெற்றது.

இந்த திருமண கலாச்சார சம்பிரதாய முறைகளான “போருவ” நிகழ்வுகள் திருமண பதிவு திருமண கேக் வெட்டுதல் பெற்றோர்களுடன் பரிசு பொருள் பரிமாற்றம் ஆகியனவும் இடம் பெற்றன.

இந்த திருமண நிகழ்வுக்கு பெரும் அளவிலான நலன்விரும்பிகளும் மணமக்களின்; குடும்ப உறவினர்கள், சிரேஷ்ட அதிகாரிகளும், புனர்வாழ்வு பணியகத்தின் அதிகாரிகள், மற்றும் படையினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.latest Running Sneakers | Nike