Header

Sri Lanka Army

Defender of the Nation

21st June 2020 06:00:50 Hours

571 ஆவது படைப் பிரிவின் படையினருக்கு கொவிட்-19 மற்றும் டெங்கு தொடர்பான விரிவுரை

கொவிட் -19 தொற்று மற்றும் அதன் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வானது 19 ஆம் திகதி வியாழக்கிழமை 571 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தின் நடாத்தப்பட்டது.

57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் டி.ஜி.எஸ். செனரத்யாபா அவர்களின் வேண்டுகோளின் பிரகாரம் கிளிநொச்சி சுகாதார சேவைகளின் பிரதேச பணிப்பாளர், கிளிநொச்சி தொற்றுநோயியல் பிரதேச மருத்துவர், கிளிநொச்சி, கராச்சி சுகாதார மருத்துவ அதிகாரிகள் மற்றும் கண்டாவலி பிரதேச செயலக அதிகாரிகள் ஆகியோரினால் இந்த விழிப்புணர்வு சொற்பொழிவுகள் நடாத்தப்பட்டன.

குறிப்பிட்ட பகுதிகளில் தற்போதுள்ள கொவிட்-19 மற்றும் டெங்குவிற்கான தடுப்பு நடவடிக்கைகள், மற்றும் எதிர்கால அச்சுறுத்தல்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன, அதே நேரத்தில் சில பகுதிகளில் 57 பாதுகாப்பு படைப் பிரிவின் உதவிகளின் சாத்தியக்கூறுகள் குறித்து கவனம் செலுத்தியது.

571 ஆவது பாதுகாப்பு படைப்பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் டி.கே.எஸ்.கே தொலகே அவர்கள் இந்த நிகழ்வை நடாத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கினார்.

571 ஆவது பாதுகாப்பு படைப்பிரிவின் படைத் தளபதி, 571 ஆவது பிரிகேட் தளபதி, 57ஆவது பாதுகாப்பு பிரிவின் தலைமையக பட்டாலியனின் பதவி நிலை அதிகாரிகள் , சிவில் விவகார அதிகாரிகள் , கட்டளை அதிகாரிகள் மற்றும் கட்டளை பட்டாலியன்களின் இரண்டாவது அதிகாரிகளும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். Best Authentic Sneakers | Men Nike Footwear