Header

Sri Lanka Army

Defender of the Nation

17th January 2020 21:51:26 Hours

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி படையினரால் முன்னெடுக்கப்பட்ட தைப்பொங்கள் நிகழ்வு

இந்து மக்களின் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு முல்லைத் தீவு படையினரால் வட்டப்பளை இந்து கோவிலில் தைப்பொங்கல் நிகழ்வுகள் இந்து குருக்கள் மற்றும் படையினர்களின் பங்களிப்போடு தைப்பொங்கல் தினத்தன்று (15) இக் கோவிலில் இடம் பெற்றது.

இந் நிகழ்வுகள் முல்லைத் தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் ஜயந்த செனெவிரத்தின அவர்களின் தலைமையில் இடம் பெற்றதுடன் 64ஆவது படைப் பிரவின் படையினர் இதற்கான முழு ஒத்துழைப்பையும் வழங்கினர்.

இதன் போது தன்சல் (இலவச உணவு வழங்கல்) போன்ற அன்னதான நிகழ்வுகளும் இக் கோயில் வளாகத்தில் இடம் பெற்றது.

அதற்கமைய 683ஆவது படைப் பிரிவினரால் வள்ளிபுரம் நினைவில்லம் எனும் சிறுவர் இல்லத்திற்கு பாற்சோரானது வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் 64 மற்றும் 68ஆவது படைத் தலைமையக தளபதிகள் மற்றும் 683ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியவர்கள் அத்துடன் அரசாங்க அதிகாரிகள் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பல படையினர் போன்றோர் கலந்து கொண்டனர்.

அதற்கமைய கிளிநொச்சி கந்தசாமி கோவிலில் தைப் பொங்கல் நிகழ்வுகள் (15) திகதி 57ஆவது படையினரால் நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டை மேற்கொள்ளும் நோக்கில் இடம் பெற்றது.

இந் நிகழ்வுகள் 57ஆவது படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் பீ பி எஸ் டி சில்வா அவர்களின் வழிகாட்டலின் கீழ் இடம் பெற்றது.

இவ் வழிபாட்டு நிகழ்வுகளில் 57ஆவது படைத் தலைமையக தளபதி உள்ளடங்களாக 571 572 மற்றும் 574ஆவது படைப் பிரிவுகளின் கட்டளை அதிகாரிகள் மற்றும் படையினர் போன்றோர் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் கிளிநொச்சி பிரதேச 150 படையினர்கள் மற்றும் 100 பிரதேசவாசிகள் போன்றோர் கலந்து கொண்டனர். Sneakers Store | Men’s shoes