Header

Sri Lanka Army

Defender of the Nation

17th January 2020 17:59:34 Hours

இராணுவத்தினரால் கிளிநொச்சி மாணவர்களுக்கான நலன்புரி சேவைகள் முன்னெடுப்பு

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் ஜயந்த குணரத்தின அவர்களின் வழிகாட்டலின் கீழ் இப் படைத் தலைமையக படையினர் மற்றும் கல்கிச்சை புனித தோமஸ் கல்லூரியின் 16ஆவது கொழும்பு சாரனர் குழுவினரின் நன்கொடையின் மூலம் சிவநகர் அரச கலவன் பாடசாலைக்கான புதிய நீர் குழாய்கள் ஞாயிற்றுக் கிழமை (12) வழங்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 66ஆவது படைப் பிரிவின் 5ஆவது (தொண்டர்) இயந்திரவியல் காலாட் படையணி படையினரால் புதிய நீர்தாங்கி மற்றும் நீர்குழாய்கள் போன்ற பொருத்தப்பட்டதுடன் இதற்கான கட்டுமானப் பணிகளும் இப் படையினரால் மேற்கொள்ளப்பட்டது.

இந் நிகழ்வில் அதிபர் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் அத்துடன் படையினர்கள் நன்கொடையாளர்கள் போன்றோர் கலந்து கொண்டனர். Sport media | Mens Flynit Trainers