Header

Sri Lanka Army

Defender of the Nation

06th January 2020 14:37:16 Hours

அதிகாரிகள் துறைசார் அபிவிருத்தி நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட 18 ஆவது பயிற்சி நெறி

புத்தலவில் உள்ள அதிகாரிகள் துறைசார் அபிவிருத்தி நிலையத்தில் இராணுவ அதிகாரிகளின் சேவையை மேம்படுத்தும் வகையிலான படைப் பிரிவு கட்டளை பயிற்சிகள் (யுசிசி) 6 மற்றும் யூனியர் கட்டளை பயிற்சிகள் (ஜெசிசி) 18 ஆவது பயிற்சி நெறிகள் வெள்ளிக் கிழமை (03) இந் நிலையத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் ஜயநாத் ஜயவீர அவர்களின் சிறந்த சிறந்த விரிவு ரையுடன் ஆரம்பமாகியது.

இப் பயிற்சிகளில் 24லெப்டினன்ட் கேர்ணல்கள் மற்றும் மேஜர்கள் மற்றும் 53 மேஜர் மற்றும் கெப்டண்ட் போன்றோர் (யுசிசி) 6 மற்றும் (ஜெசிசி) 18 போன்ற பயிற்சி நெறியை மேற்கொண்டுள்ளனர். மேலும் நேபாளத்தின் ஓர் அதிகாரியவர்களும் இவ் 18ஆவது ஜெசிசி போன்ற பயிற்சிகளில் கலந்து கொண்டனர்.

இதன் போது மேஜர் ஜெனரல் ஜயவீர அவர்களால் இவ்விரு பயிற்சிகளின் முக்கியத்தும் தொடர்பாக விளக்கப்பட்டது. இதன் மூலம் இராணுவத்தில் சிறந்த தகமையை உருவாக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். அத்துடன் இராணுவ வாழ்வின் ஒழுக்கம் நேர்மை நேரான சிந்தனை அனுகுமுறை தொடர்பாகவும் அவற்றின் முக்கியத்துவம் தொடர்பாகவும் அவர் விளக்கினார்.

இந் நிகழ்வில் அதிகாரிகள் துறைசார் அபிவிருத்தி நிலையத்தின் பிரதான பயிற்றுவிப்பாளரான கேர்ணல் டபிள்யூ எஸ் என் ஹேமரத்தின நிர்வாக அதிகாரிகள் போன்றோர் கலந்து கொண்டனர்.best Running shoes brand | UK Trainer News & Releases