Header

Sri Lanka Army

Defender of the Nation

05th January 2020 20:21:42 Hours

இராணுவத்தின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 66 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் மங்கள விஜயசுந்தர அவர்களது வழிக்காட்டலின் கீழ் 661 அவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் சாந்த ஹேவகே அவர்களது தலைமையில் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

விநாசிஓடை மற்றும் ஞானமடம் அரச கலவன் பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு மஹரகம லியோ கழகம் மற்றும் யாழ் பலைக்கலகத்தின் அனுசரனையில் தரம் 1 – 13 வரையான 178 மாணவர்களுக்கு இந்த கற்கை உபகரணங்கள் இம் மாதம் (3) ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வுகள் 661 ஆவது படைத் தலைமையகத்தின் பூரன ஏற்பாட்டில் 24 ஆவது விஜயபாகு காலாட் படையணி, 5 பொறிமுறை காலாட் படையணியின் பங்களிப்புடன் இடம்பெற்றன.

661 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதியவர்கள் இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்து மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்கி வைத்தார். இச்சந்தர்ப்பத்தில் 24 ஆவது பொறிமுறை காலாட் படையணியைச் சேர்ந்த படை வீரர்கள் மற்றும் இப்பிரதேசத்தைச் சேர்ந்த கிராமவாசிகள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.Nike footwear | Air Jordan