Header

Sri Lanka Army

Defender of the Nation

05th January 2020 11:50:55 Hours

622ஆவது பாதுகாப்பு படையினரால் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு

குறைந்த வருமானத்தை பெறுகின்ற குடும்பங்களில் உள்ள மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்தல் மற்றும் அவர்களை ஊக்குவித்தல் போன்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு, வன்னி பாதுகாப்பு படைத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு வெள்ளிக் கிழமை 3ஆம் திகதி இடம்பெற்றது.அதனடிப்படையில் பிட்டகோட்டையிலுள்ள சமதி அமைப்பின் அனுசரணையுடன் ஏ/கூன்கெட்டியாவ கனிஷ்ட பாடசாலையில் கல்வி கற்கும் 220 மாணவர்களுக்கு இக் குறித்த பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த மாணவர்களின் கஷ்ட நிலைமைகளை கருத்திற் கொண்டு, 62ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் தம்மிக்க ஜயசிங்க அவர்களின் மேற்பார்வையின் கீழ், 622ஆவது பாதுகாப்பு படைத் தலைமையக கட்டளை தளபதி கேணல் ஏ.எம்.சி.பி விஜேரத்ன அவர்களின் அறிவுறுத்தலின் பிரகாரம், 622ஆவது பாதுகாப்பு படைத் தலைமையக படையினரால் இந்த அன்பளிப்பு நிகழ்வானது ஏற்பாடு செய்யப்பட்டது.

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிவில் சமூக விவகார அதிகாரி லெப்டின்ன் கேணல் ஜி.ஏ.எல் கித்சிறி அவர்களின் ஒத்துழைப்புடன் இத்திட்டமானது நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக 622ஆவது பாதுகாப்பு படைத் தலைமையக கட்டளை தளபதி கேணல் ஏ.எம்.சி.பி விஜேரத்ன அவர்கள் கலந்து கொண்டார்.

பிட்டகோட்டை சமதி அமைப்பின் பிரதிநிதிகள்,சிரேஷ்ட அதிகாரிகள், 62 மற்றும்622 ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகங்களின் அதிகாரிகள், ஏ/கூன்கெட்டியாவ கனிஷ்ட பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். trace affiliate link | Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信!