Header

Sri Lanka Army

Defender of the Nation

04th December 2019 13:55:23 Hours

22 ஆவது படைத் தளபதியினால் சமூக உதவி பணித் திட்டங்கள்

சேருநுவர பிரதேசத்திலுள்ள ஐந்து பாடசாலையைச் சேர்ந்த பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த 500 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வானது சேருநுவர பிரதேச சபை கேட்போர் கூடத்தில் கடந்த நவம்பர் மாதம் (28) ஆம் திகதி இடம்பெற்றது.

222 ஆவது படைத் தலைமையகத்தின் பூரன ஏற்பாட்டில் 22 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் A. I மாரசிங்க அவர்களினால் பாடசாலை மாணவர்களுக்கு பென்சில், புத்தகங்களை உள்ளடக்கிய பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மேலும் 2 (தொண்டர்) கஜபா படையணின் பூரன ஏற்பாட்டில் திருகோணமலையிலுள்ள சீனக்குடா மற்றும் திரியாய் பிரதேசங்களில் உள்ள கெமுனுபுர மற்றும் போதிபதபரமய விகாரை வளாகத்தினுள் முதன்மை மருத்துவ பராமரிப்பு மையம் கடந்த நவம்பர் மாதம் 22, 26, 29 ஆம் திகதிகளில் இடம்பெற்றன.

திருகோணமலையிலுள்ள மிஹிந்தபுர வித்தியாலயத்தின் சித்திரக்கலைகளில் திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களுக்கு பரிசளிப்பு வழங்கும் நிகழ்வானது கடந்த மாதம் (29) ஆம் திகதி இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்த மேஜர் ஜெனரல் மாரசிங்க அவர்கள் மாணவர்களுக்கு பரிசினை வழங்கி வைத்தார். Nike Sneakers Store | Best Nike Air Max Shoes 2021 , Air Max Releases and Deals