Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd December 2019 20:41:07 Hours

பதவி நிலை பிரதானி விஜயபாகு காலாட் படைத் தலைமையகத்திற்கு விஜயம்

இலங்கை இராணுவத்தின் பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே அவர்கள் கடந்த நவம்பர் மாதம் (28) ஆம் திகதி போயகனையிலுள்ள விஜயபாகு காலாட் படைத் தலைமையகத்திற்கு நிர்வாக பரிசீலனையை மேற்கொள்வதற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை கடந்த மாதம் (28) ஆம் திகதி மேற்கொண்டார்.

தலைமையகத்திற்கு வருகை தந்த பதவி நிலை பிரதானியை விஜயபாகு காலாட் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரோஹித கெடகும்புர அவர்கள் வரவேற்றார்.

பின்பு விஜயபாகு காலாட் படையணியினால் பதவி நிலை பிரதானிக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைத்து கௌரவிக்கப்பட்டார்.

அதனை தொடர்ந்து தலைமையகத்திற்கு வருகை தந்த பதவி நிலை பிரதானி நிர்வாக பரிசீலனைகளை மேற்கொண்டு அங்குள்ள அதிகாரிகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்டு அதிகாரிகளுக்கு பரிந்துரைகளை வழங்கி வைத்தார்.

இச்சந்தர்ப்பத்தில் இராணுவ தலைமையக பணிப்பாளர்கள் மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Nike air jordan Sneakers | 【国内5月2日発売予定】ナイキ ウィメンズ エアマックス ココ サンダル 全4色 - スニーカーウォーズ