Header

Sri Lanka Army

Defender of the Nation

30th November 2019 16:00:02 Hours

படையினரால் வரிய குடும்பங்களுக்கான சூரிய மின்சக்தி கருவிகள் பகிர்ந்தளிப்பு

66 ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 663 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தின் ஒத்துழைப்புடன் கராச்சி மற்றும் புநேரீன் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வன்னேரிக்குளம், ஜயபுரம், வேராவில் மற்றும் வல்லைபாடு போன்ற பிரதேசத்தில் வசிக்கும் 10 வரிய குடும்பங்களுக்கான சூரிய மின்சக்தி கருவிகள் கடந்த (21) ஆம் திகதி வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

இந்த திட்டம் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிபிரிய அவர்களின் ஆலோசனைக்கமைய 66 ஆவது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்.டி விஜேசுந்தர அவர்களுடன் படையினர் மற்றும் கிராம சேவக அதிகாரிகளினால் தெரிவு செய்யப்பட்டன.

அதேவேலை, 663 ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் 15 ஆவது இலங்கை இராணுவ பீரங்கி படையணி மற்றும் 2 ஆவது இலங்கை இராணுவ தேசிய பாதுகாப்பு படையணியும் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டதுடன், இந் நிகழ்வில் 663 ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேணல் சுபாஷன் லியனகம, சிவல் சமூக விவகார அலுவலகர், மற்றும் பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்..மேலும் மதத் தலைவர்கள்,பாடசாலை அதிபர்கள் மற்றும் கிராம சேவக அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

அதேவேலை இந் நிகழ்வுடன் சாகுபடியை ஊக்குவிக்கும் நிமித்தம் “டேர்கி பெரி” மரக்கன்றுகள் அப் பிரதேச வாசிகளின் நலன் கருதி வழங்கப்பட்டன. இதன் போது அதிகமான பொதுமக்கள் பலர் கலந்து கொண்டன. bridge media | Nike