Header

Sri Lanka Army

Defender of the Nation

30th November 2019 16:50:02 Hours

மித்திர சக்தி படையினர் இந்தியாவிற்கு பயணம்

இலங்கை இராணுவத்தின் கெமுனு ஹேவா படையணியின் 11 அதிகாரிகள் மற்றும் 109 படையினர்களை உள்ளடக்கி இடம் பெறவுள்ள இந்திய இராணுவத்தினரால் ஒழுங்கமைக்கப்பட்ட வருடாந்த இடம் பெறும் 'மித்ரா சக்தி- V11 இராணுவப் பயிற்சியான இல் பங்கேற்க இலங்கை இராணுவத்தினர் (29) ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை இந்தியாவுக்கு பயணத்தை மேற் கொண்டனர்.

ஏழாவது தடவையாக நடைபெறவிருக்கும் இரண்டு வார கால இராணுவப் பயிற்சியானது படைகளுக்கு கிடையிலான இராணுவப் பிரச்சினைகளைப் புரிந்துகொள்வது போன்றவற்றை மேம்படுத்துவதற்கும், இயங்கு தன்மை இராணுவ ஒத்துழைப்பு கூட்டு தந்திரோபாய நடவடிக்கைகள் இராணுவ அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளல் மற்றும் எதிர்காலத்தில் எவ்வாறான பாதுகாப்பு அச்சுருத்தல்களையும் எதிர்கொள்ளுதல் போன்றன மேற்கொள்ளப்படுகின்றன.

இப் பயிற்சியானது இராணுவ தந்திரோபாயங்கள், அனுபவம், காலாட்படைகளின் தொழில்நுட்பங்களின் பரிமாற்றம், பயங்கரவாத எதிர்ப்பு நடைமுறைகள், நீண்ட தூர உளவு ரோந்து பணிகள் (எல்.ஆர்.ஆர்.பி) நுட்பங்கள், சிறு குழு நடவடிக்கைகள், துப்பாக்கி சுடும் வீரர்களின் திறமையான, பயங்கரவாத மறைவிடங்கள் மீது உருவகப்படுத்தப்பட்ட தாக்குதல்கள், தற்கொலை குண்டுதாக்குதல்கள் தொடர்பான அறிவை பெற்று கொள்வதை நோக்கமாகக் கொண்ட இந்த பயிற்சியில் இரு இராணுவ தரப்பினர்களுக்கு இடையில் வெடிக்கும் சாதனங்களின் பயன்பாடு போன்றவை மேம்படுத்தி கொள்வதற்காக, 2012 ஆம் ஆண்டு முதல், இந்தியாவில் மூன்று தடவையும் மற்றும் இலங்கையில் மூன்று தடவையும் இருதரப்பு இராணுவ புரிதலையும் நல்லெண்ணத்தின் பிணைப்பையும் ஊக்குவிக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்டுள்ளன.

இந்த திட்டமானது இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் அவர்களின் வழிக்காட்டுதலுக்கமைய இராணுவ காலாட் ஜெனரல் பணியகத்தின் பணிப்பகத்தின் மேஜர் ஜெனரல் மனோஜ் முத்தனாயக அவர்களின் தலைமையில் இராணுவ காலாட் ஜெனரல் பணிப்பகத்தின் பிரிகேடியர் தேசபிரிய குனவர்தன அவர்களும் இணைந்து இராணுவ வெளிவிவகார நடவடிக்கை பணிப்பகத்தின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்டது.

இப் பயிற்சியில் கேர்ணல் பாத்தியா முதன்நாயக அவர்கள் சிரேஷ்ட உடற்பயிற்சி ஒருங்கிணைப்பாளராகவும், பார்வையாளராகவும் செயல்படுவதுடன், மேஜர் ருவான் எதிரிசிங்க ‘மித்ரா சக்தி - VII’ இல் உடற்பயிற்சி மதிப்பீட்டாளராக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இவர்களை வழியனுப்ப விமான நிலையத்தில் பல சிரேஷ்ட அதிகாரிகளும் வருகை தந்திருந்தனர். Running sport media | Sneakers Nike