Header

Sri Lanka Army

Defender of the Nation

26th November 2019 00:33:53 Hours

காலஞ்சென்ற லெப்டினன்ட் கேர்ணல் பெஸ்டியன் அவர்களின் இறுதிக் கிரிகைகளில் கலந்து கொண்ட இராணுவத் தளபதி

இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் சுகயீனம் காரணமாக திடீரென காலஞ்சென்ற விஜயபாகு காலாட் படையணியின் லெப்டினன்ட் கேர்ணல் எச் எல் சி பெஸ்டியன் ஆர்டபிய்யூபி ஆர்எஸ்பி அவர்களின் இறுதிக் கிரிகைகளில திங்கட் கிழமை (25) மாலை கலந்து கொண்டார்.

அந்த வகையில் இன்று மாலை (25) காலிப் பிரதேசத்தின் ததேல மயானத்தில் பாரிய அளவிலான உயர் அதிகாரிகளின் தலைமயில் இறுதிக் கிரிகைக்கான அஞ்சலி நிகழ்வுகள் இடம் பெற்றது. இதன் போது கலந்து கொண்ட இராணுவத் தளபதியவர்கள் காலஞ்சென்ற அதிகாரியவர்களின் குடும்பத்தாருடன் கலந்துரையாடினார்.

அந்த வகையில் லெப்டினன்ட் கேர்ணல் பெஸ்டியன் அவர்கள் 56ஆவது படைத் தலைமையகத்தில் ஜெனரல் ஸ்டாப் அதிகாரி 1 (நிர்வாக மற்றும் பராமரிப்பு) ஆக சேவையாற்றிய வேளை காலமானார். இதன் போது மேற்கொள்ளப்பட்ட இறுதிக் கிரிகை நிகழ்வானது அதிகாரியவர்களின் சடலம் கொண்டுவரப்பட்ட பெட்டியானது தேசிய கொடி சுற்றப்பட்டு துப்பாக்கிச் சூட்டு மரியாதைகளுடன் இடம் பெற்றதுடன் அதனைத் தொடர்ந்து இராணுவத்தின் பகுதி 1 ஆனது வாசிக்கப்பட்டதுடன் பதக்கங்கள் மற்றும் சின்னங்கள் போன்றன இராணுவ விதிமுறைகளுக்கமைவாக அன்னாரின் குடும்பத்தாரிற்கு வழங்கப்பட்டது.

மேலும் நாட்டிற்கு பாரிய சேவையாற்றிய உயர் அதிகாரிகளுக்கு மரியாதை வழங்கும் நோக்கில் துப்பாக்கி பிரயோக மரியாதை நிகழ்வுகள் இடம்பெறுவதாகும்.

அந்த வகையில் இந் நிகழ்வில் குடும்ப உறுப்பினர்கள் உயர் அதிகாரிகள் விஜயபாகு காலாட் படையணியின் தளபதியான மேஜர் ஜெனரல் ஆர் கே பீ எஸ் கெடகும்புர மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இராணுவத் தளபதியவர்களால் வெளியிடப்பட்ட பகுதி 1

லெப்டினன்ட் கேர்ணல் எச் எல் சி பெஸ்டியன் ஆர்டபிள்யூபி ஆர்எஸ்பி

அந்த வகையில் விஜயபாகு காலாட் படையணியின் உயர் அதிகாரிகள் மற்றும் படையினர் தமது ஆழ்ந்த அனுதாபங்களை காலஞ்சென்ற லெப்டினன்ட் கேர்ணல் எச் எல் சி பெஸ்டியன் ஆர்டபிள்யூபி ஆர்எஸ்பி அதிகாரியவர்களுக்கு 23ஆம் திகதி நவம்பர் 2019ஆம் இடம் பெற்ற இறுதிக் கிரிகைகளின் போது தெரிவித்தனர்.

அந்த வகையில் ஹத்முனெ லியனகே சிரஞ்சய பெஸ்டியன் அவர்கள் திரு ஹத்முனெ லியனகே சிட்னி ரோலன்ட் மற்றும் திருமதி வல்கம கண்கம்கே யசாவதி போன்றோறுக்கு புதல்வராக 15ஆம் திகதி டிசெம்பர் 1974ஆம் ஆண்டு காலி பொது மருத்துவமனையில் பிறந்தார். மேலும் இவர் தமது உயர் கல்வியை ரிச்மன்ட் கல்லூரியில் பயின்றார்.

அதனைத் தொடர்ந்து அவரது உயர் கல்வியின் பிற்பாடு எச் எல் சி பெஸ்டியன் அவர்கள் இலங்கை இராணுவத்தின் நிரந்தப் படையணியில் 1995ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் திகதி இணைந்ததுடன் தியத்தலாவை இராணுவ அக்கடமியில் 42ஆவது பிரிவில் தமது பயிற்சிகளைப் பெற்றார். அத்துடன் அவர் 02ஆம் லெப்டினன்ட் ஆக 1996ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 21ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் விஜயபாகு காலாட் படையணியின் அதிகாரியாக காணப்பட்டார். அத்துடன் இவர் பலவாறான பதவிநிலைகளை வகித்ததுடன் உயர் பட்டத்தைப் பெற்றதுடன் தமது சேவையை பொறுப்பான முறையில் மேற்கொண்டார்.

இவரது கடின உழைப்பை முன்னிட்டு 1998ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27ஆம் திகதி லெப்டினனாக 2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27ஆம் திகதி கெப்டனாக 2005ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27ஆம் திகதி மேஜராக மற்றும் 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி லெப்டினன்ட் கேர்ணலாக பதவியேற்றுள்ளார்.

குழுத் தளபதி – 4ஆவது விஜயபாகு காலாட் படையணித் தலைமையம்

கட்டளை அதிகாரி – 4ஆவது விஜயபாகு காலாட் படையணித் தலைமையம்

ஜெனரல் ஸ்டாப் அதிகாரி 111– 211ஆவது படைத் தலைமையம்

நடவடிக்கை மற்றும் பயிற்றுவிப்பு அதிகாரி - 4ஆவது விஜயபாகு காலாட் படையணித் தலைமையம்

2ஆம் கட்டளை அதிகாரி - 24ஆவது விஜயபாகு காலாட் படையணித் தலைமையம்

ஜெனரல் ஸ்டாப் அதிகாரி 11–12ஆவது படைத் தலைமையம்

கட்டளை அதிகாரி – 8ஆவது விஜயபாகு காலாட் படையணித் தலைமையம்

ஸ்டாப் அதிகாரி – 58ஆவது; படைத் தலைமையம்

ஸ்டாப் அதிகாரி – 56ஆவது; படைத் தலைமையம்

மேலும் லெப்டினன்ட் கேர்ணல் எச் எல் சி பெஸ்டியன் அவர்கள் இராணுவ சஹாரா மேற்கில் ஐக்கிய நாடுகளின் சமாதான நடவடிக்கைப் பணிகளை மேற்கொண்டார். மேலும் அவர் பலவாறான வெளிநாட்டு பயிற்சிகளை மேற்கொண்டுள்ளதுடன் இவ் அதிகாரியவர்கள் பின்பற்றிய பயிற்சி நெறிகள் பின்வருமாறு

பேசிக் மார்க்ஸ்மன் பயிற்சி

யூனியர் கெமாண்ட் பயிற்சி

வாலிப அதிகாரிகள் பயிற்சி - இந்தியா

யூனியர் கெமாண்ட் பயிற்சி – பாகிஸ்தான்

அடிப்படை பரசூட்; பயிற்சி - இந்தியா

மேலும் இவ் அதிகாரியவர்கள் ரிவிரச ஜயசிகுரு கினிதிர அக்னிகீல வடக்கு மற்றும் கிழக்கில் இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகளில் தமது தாய் நாட்டை பயங்கரவாதிகளிடமிருந்து பாதுகாக்கும் நோக்கில் காணப்பட்டார். இதன் போது அவர் பெற்றுக் கொண்ட கௌரவ பதக்கங்கள் பின்வருமாறு

ரணவிக்கிரம பதக்கம்

ரணசூர பதக்கம்

கிழக்கு மனிதாபிமான நடவடிக்கைப் பதக்கம்

வடக்கு மனிதாபிமான நடவடிக்கைப் பதக்கம்

பூர்ண பூமி பதக்கம்

வடக்கு மற்றும் கிழக்கு நடவடிக்கைப் பதக்கம்

ரிவிசர சேவைப் பதக்கம்

50ஆவது சுதந்திர தின ரிவிசர சேவைப் பதக்கம்

சிலோன் படை சேவை நீண்ட கால சேவைப் பதக்கம்

விதேஷ சேவைப் பதக்கம்

லெப்டினன்ட் கேர்ணல் எச் எல் சி பெஸ்டியன் அவர்கள் விஜயபாகு காலாட் படையணயின் அதிகாரிகள் மற்றும் படையினருக்கு முன் உதாரணமாக விளக்கினார். மேலும் இவ் அதிகாரிகயவர்கள் தமது 24வருட கால இராணுவ சேவையின் போது நாட்டிற்காக அர்பணிப்புடன் செயற்பட்டுள்ளார்.

அந்த வகையில் காலஞ்சென்ற லெப்டினன்ட் கேர்ணல் எச் எல் சி பெஸ்டியன் ஆர்டபிள்யூபி ஆர்எஸ்பி அவர்களின் இறுதிக் கிரிகையானது இராணுவ முறைகளுக்கமைய 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25ஆம் திகதி தத்தல பொது மயானத்தில் இடம் பெறவுள்ளது. இதன் போது விஜயபாகு காலாட் படையணியின் அதிகாரிகள் மற்றும் படையினர்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.

லெப்டினன்ட் கேர்ணல் எச் எல் சி பெஸ்டியன் அவர்கள் மரணித்தாலும் தங்களது சேவை மற்றும் பெயர் நாட்டிற்காக அர்பணிப்புடன் செயலாற்றிய முறைகள் போன்றன என்றும் இலங்கை இராணுவத்தினரின் நெஞ்சை விட்டு நீங்காது. என்றும் தாய் நாட்டின் சிறந்ததோர் புதல்வராக காணப்படுவர்.

தங்களுடைய ஆத்மா சாந்திக்கு எங்களது பிரார்தனைகள் buy footwear | Top Quality adidas Yeezy 700 V3 "Eremiel" GY0189 , Ietp