Header

Sri Lanka Army

Defender of the Nation

20th November 2019 08:35:31 Hours

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் நடாத்தப்பட்ட வினாடி வினா விடைப் போட்டி

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் சேவைபுரியும் அனைத்து அதிகாரிகளினதும் பொது அறிவினை மேலும் அதிகரிக்குமுகமாக நடாத்தப்பட்ட வினாடி வினா விடைப் போட்டியானது 2019 நவம்பர் 14ஆம் திகதி வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் இடம்பெற்றது.

மேலும் பல சுற்றுகளாக இடம்பெற்ற இப்போட்டியில் 3ஆவது இலங்கை சேவைப் படையணியானது படையணிகளுக்கிடையில் நடாத்தப்பட்ட 2019 ஆம் ஆண்டிற்கான வினாடி வினா விடைப் போட்டியில் 170 புள்ளிகளைப் பெற்று முதல் வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டனர். அதேவேலை 2ஆவது இயந்திரவியல் காலாட் படையணியினர் 170 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தைபெற்றுக்கொண்டன.

இந்த நிகழ்விற்கு வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சான்றிதல்கள் வழங்கினார். அதேபோல் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திலும் இது போன்ற நிகழ்வு இடம்பெற்றது என்பது குறிப்பிடதக்க விடயமாகும்.

இந்த நிகழ்வில் 21, 54, 56, 61 மற்றும் 62 ஆவது படைப் பிரிவுகளின் படைத் தளபதிகள் பிரிகேடியர் பொது பதவி நிலை அதிகாரி, வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் வினியோகம் தளபதி, வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பட்டாலியன்களின் கீழ் உள்ள கட்டளை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.Sport media | Beyonce Ivy Park x adidas Sleek Super 72 ICY PARK White , Where To Buy , GX2769 , Ietp