Header

Sri Lanka Army

Defender of the Nation

17th November 2019 18:28:36 Hours

வன்னி தலைமையகத்தில் ‘பூடோ’ தற்பாதுகாப்பு கலை பயிற்சி நிறைவு

வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தினால் - வன்னியில் 28 அக்டோபர் 2019 அன்று ஆரம்பிக்கப்பட்ட தற்காப்பு ‘பூடோ’ தற்காப்புக் கலைப் பயிற்சியின் மூன்றாம் கட்ட பயிற்றுவிப்பாளர் தரப்படுத்தலுக்கு மிகவும் திறமையான மாணவர்களைத் தேர்ந்தெடுக்கும் ஒரு மெகா போட்டியானது இம் மாதம் (15) ஆம் திகதி வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. இப்போட்டியானது வன்னி பாதுகாப்பு கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்களின் வழிக்காட்டலின் கீழ் இடம்பெற்றது.

தற்பாதுகாப்பு கலையின் முதல் கட்ட பயிற்சிகள் 2019 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 01 – 16 ஆம் திகதி வரையும், இரண்டாம் கட்ட பயிற்சிகள் செப்டம்பர் மாதம் 05 – 25 ஆம் திகதி வரையும் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் இடம்பெற்றது.

இந்த பயிற்சிகளில் 9 அதிகாரிகள் மற்றும் 308 படை வீரர்கள் 15 நாட்கள் பயிற்சிகளை மேற்கொண்டனர். இறுதி தற்பாதுகாப்பு கலை பயிற்சிகளில் 11 அதிகாரிகளும் 278 படை வீரர்களும் இணைந்திருந்தனர்.

வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்கள் படையினரது தைரியத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த தற்பாதுகாப்பு பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இறுதி தேர்வு போட்டிகளுக்கு தேர்வான போட்டியாளர்கள் இலங்கை ரென்ஷி திரு க்லேமன்ட் டி சில்வா (கருப்பு பட்டி – டேன் 8) அவர்களது பயிற்றுவிப்பின் கீழ் தற்பாதுகாப்பு பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த இறுதி சுற்றுப் போட்டி நிகழ்வில் 56 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி,வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பொது நிர்வாக அதிகாரி பிரிகேடியர், 211, 212 மற்றும் 571 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதிகள் இணைந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். latest Running | 2021 New adidas YEEZY BOOST 350 V2 "Ash Stone" GW0089 , Ietp