Header

Sri Lanka Army

Defender of the Nation

16th November 2019 19:10:47 Hours

இராணுவ துறைசார் அபிவிருத்தி அதிகாரி நிலையத்தின் கட்டளை தளபதிக்கு வரவேற்பு

இலங்கை இராணுவ துறைசார் அபிவிருத்தி நிலையத்தின் கட்டளை தளபதியான மேஜர் ஜெனரல் ஜயநாத் ஜயவீர அவர்களது பதவியுயர்வின் நிமித்தம் இவருக்கு இம் மாதம் 11 ஆம் திகதி இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

பின்னர் கட்டளை தளபதி அவர்களினால் பயிற்சி நிலைய வளாகத்தினுள் மரநடுகைகள் மேற்கொள்ளப்பட்டு படையினர் மத்தியில் உரையையும் நிகழ்த்தினார்.

பின்னர் இந்த நிலையத்திலுள்ள அனைத்து அங்கத்தவர்களது பங்களிப்புடன் கட்டளை தளபதி தேநீர் விருந்தோம்பல் நிகழ்வில் இணைந்து கொண்டார்.

இலங்கை இலேசாயுத காலாட் படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர அவர்கள் இம் மாதம் 8 ஆம் திகதி மேஜர் ஜெனரல் பதவிக்கு உயரத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். best Running shoes | adidas Yeezy Boost 350